முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி நகைகளை அடகு வைத்து ரூ.4.50 லட்சம் மோசடி

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூலை.15 - மதுரையில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4.50 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை நடராஜ் நகரைச் சேர்ந்தவர் ரவி(24). இவர் அப்பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 25 -ம் தேதி முதல் அண்மைக்காலம் வரை பசுமலையைச் சேர்ந்த இன்சூரன்ஸ் முகவர் குமார் (45), பாலசண்முகம் (42), பொதும்பைச் சேர்ந்த பாண்டீஸ்வரி (21), திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகசுந்தரம் (40), மதுரையைச் சேர்ந்த குமார் (35) ஆகியோர் ரவியிடம் கூட்டாகச் சேர்ந்து 35 பவுன் தங்கநகைகளை அடகு வைத்துள்ளனர். இந்த நகைகளுக்காக ரூ.4.50 லட்சம் பணம் பெற்றனர். இதற்கிடையே, இந்த நகைகளை ரவி சோதனை செய்து பார்த்தபோது அனைத்தும் செம்பு கலந்த போலி நகைகள் எனத்தெரியவந்தது.  இதைத் தொடர்ந்து இவர்கள் 5 பேரிடமும் பணத்தைத் திருப்பித்தந்து நகையைப்பெற்றுக்கொள்ளும்படி ரவி கேட்டுள்ளார். ஆனால், இவர்கள் 5 பேரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ரவி போலீசில் புகார் செய்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து மதுரை ஜே.எம்.1 கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். கோர்ட் உத்தரவின் பேரில் மதுரை நகர் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்