முக்கிய செய்திகள்

கேரளாவில் தனியார் நிதியுதவி நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜூலை.21 - கேரளாவில் அதிக வட்டி வசூல் செய்யும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் திட்டம் உள்ளதாக மாநில காங்கிரஸ் முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்துள்ளார். தனியார் நிறுவனங்கள் கடனுதவி செய்வதாக கூறிக்கொண்டு 100-க்கு 3 முதல் 5 சதவீதம் வரை வட்டி வசூல் செய்வதாக கேரள அரசுக்கு புகார்கள் வந்த வண்ணண் உள்ளன. வட்டி வசூல் செய்வதால் ஏழை மக்கள் கடும் பாதிப்புக்கும் உள்ளாகி உள்ளனர். 

இந்தநிலையில் முதல்வர் உம்மன்சாண்டி நேற்று சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் மாநிலத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் கடனுதவி செய்வதாகக் கூறிக்கொண்டு அளவுக்கு அதிகமாக வட்டி வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதனால் அதிக வட்டி வசூல் செய்யும் தனியார் நிதிநிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றார். இதுதொடர்பான இடது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வி.எஸ்.சுனில்குமாரின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் உம்மன்சாண்டி, அதிக வட்டி வசூலிப்பதாக சிறு நிதி நிறுவனங்கள் மீது இதுவரை 43 வழக்குகள் பதவி செய்யப்பட்டுள்ளன. அந்த மாதிரி அதிக வட்டி வசூல் செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனி நபர்களும் அதிக வட்டிக்கு கொடுத்து வாங்குவதாக கூறப்படுகிறது. அவர்களில் சிலர் மீதும் வழக்கு பதவி செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் உம்மன் சாண்டி மேலும் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்: