அழகர்கோவில் முருகன் கோயிலில் அ.தி.மு.க.வினர் தங்கத்தேர் இழுத்தனர்

புதன்கிழமை, 2 மார்ச் 2011      அரசியல்
TPK4

திருப்பரங்குன்றம்,பிப்.2 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மதுரை அழகர்கோவில் சோலைமலை முருகன் கோவிலில் அ.தி.மு.க. வினர் தங்கத் தேர் இழுத்தனர். இந்நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மாவட்ட முன்னாள் ஒன்றிய செயலாளர் கள்ளந்திரி சேகர் தலைமை வகித்தார்.  மதுரை புறநகர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் பரமசிவம், கிழக்கு ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி, புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழரசன், கிழக்கு தொகுதி செயலாளர் இளங்கோவன், வழக்கறிஞர் பிரிவு இரணியன் பாண்டியன், திருக்காளை ராஜ்குமார், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாஸ்கரன், மாணவரணி செயலாளர் மணிகண்டன், மகளிரணி செயலாளர் பாண்டியம்மாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், ஒத்தக்கடை சேகர், புறநகர் அம்மா பேரவை துணை செயலாளர் முருகேசன், அமைப்பு சாரா மாவட்ட செயலாளர் அன்புசெல்வம், உளத்தூர் ராஜாமணி, கருப்பாயூரணி மச்சக்காளை, மீனவரணி ஒன்றிய கிளை செயலாளர் பாஸ்கரன், குன்னத்தூர் நவநீதகுமார், தென்னவன், ஒன்றிய இளைஞர் பாசறை சுந்தரம், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், அமைப்பு சாரா ஒன்றிய துணை செயலாளர் அரவிந்தன், கருப்பாயூரணி துணை செயலாளர் பாண்டிகோவில் சமையன், கருப்பாயூரணி அம்மா பேரவை செயலாளர் நாகேந்திரன், மேற்கு ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் திருமாறன், கொடிக்குளம் செல்வம், பெரியகருப்பன், மீனவரணி மாவட்ட துணை செயலாளர் கர்ணன், பேரவை துணை செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட அவைத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்: