ரயில்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.13 - ஓடும் ரயில்களில் பயணிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை பல்வேறு வழிகளில் ரயில்வே எடுத்து வருகிறது என்று அமைச்சர் தினேஷ் திவேதி நேற்று ராஜ்யசபையில் தெரிவித்தார். பாராளுமன்ற லோக்சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் தினேஷ் திவேதி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஓடும் ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி ஓட்டப்பந்தய வீரர் ஒருவர் கொள்ளையர்களால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதில் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார். ரயில்வே பாதுகாப்பு விஷயத்தில் சமாதானத்திற்கே இடமில்லை. ரயில்களில் பாதுகாப்பை கண்காணிக்க ஒருங்கிணைந்த கண்காணிப்பு முறையை கையாளப்படும். முக்கியமான பகுதிகளில் சர்க்கியூட் கேமிராக்கள் மூலம் எல்க்ரானிக் கண்காணிப்பு முறையை கொண்டுவரப்படும். முக்கிய ரயில்நிலையங்களில் நாசவேலையை தடுக்கவும் கண்காணிப்பை பலப்படுத்தப்படும். ரயில்வே பாதுகாப்பானது மத்திய,மாநில அரசுகள் சேர்ந்து செய்ய வேண்டிய நடவடிக்கையாகும் என்றும் அமைச்சர் திவேதி மேலும் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: