முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை ரத்துசெய்ய கிருஷ்ணசாமி

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஆக.- 16 - ராஜீவ் கொலை வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார். துகுறித்து அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது,  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழக இளைஞர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருடைய கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இதற்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம் இவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற பரிந்துரையை இதற்காக முன்பாக இருந்த ஜனாதிபதிகள் கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம் ஆகியோர் நிராகரித்தனர். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தமிழக இளைஞர்களின் கருணை மனுவை நிராகரித்துள்ளார். இதன் மூலம் அவர்களுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கு, ஜெயின் கமிஷன் அறிக்கை முடிவு வெளியிடப்படவில்லை. மேலும் மற்றொரு ஏஜன்சி அமைக்கப்பட்டு அதன் முடிவுகளும் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் தமிழக இளைஞர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராஜீவ் கொலை வழக்கில் சர்வதேச குற்றவாளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற நிலையில் விசாரணை முடிவடையாத சூழலில் அவர்களுக்கு அவசர அவசரமாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தமிழக இளைஞர்கள் 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். மேலும் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டால் அதனை நிறுத்துவதற்கு வழிவகை உண்டு. மேலும் மத்திய அரசு விதித்த தூக்கு தண்டனையை கருணை அடிப்படையில் நிறுத்த மாநில அரசுக்கும், கவர்னருக்கும் முழு உரிமை உள்ளது. இது போல் ஏற்கனவே ஆந்திரா, கேரளா, உ.பி. மாநிலங்களில் தூக்கு தண்டனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழகம் முழுவதும் அனைவரும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்