முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடுதல் நிதி: ஐ.நா.விடம் இந்தியா கோரிக்கை

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

நியூயார்க்,ஆக.- 18 - அமைதிப் படைகளை பராமரிக்க கூடுதலாக நிதி ஒதுக்கி தருமாறு ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.  சுழற்சி முறையில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவராக ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் ஹர்தீப் சிங் பூரி உள்ளார். இந்நிலையில் அவர் 3 பக்க சுற்றறிக்கை ஒன்றை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி உள்ளார். அதில் அமைதி படைகளை பராமரிக்கும் விஷயத்தில் வரவுக்கும், செலவுக்கும் இடையே இடைவெளி உள்ளதாக தெரிவித்துள்ளார்.  நிதி பற்றாக்குறை காரணமாக அமைதிப் படையின் பணிகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் இதை தவிர்க்க இப்பிரச்சினை குறித்து அவை உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். உறுப்பு நாடுகள் கூடுதலாக நிதி ஒதுக்குவதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதால் அது குறித்து உறுப்பு நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்காப்புக்காக ஆயுதங்களை பயன்படுத்துவது, பணி நிர்ணயம், பணிக்கு செல்லும் நாடுகளில் உள்ள சட்ட விதிகளில் தெளிவின்மை மற்றும் அதில் எழும் சந்தேகங்களை தீர்ப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் வரும் 26 ம் தேதி நடைபெறவுள்ளதாக பூரி சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். இக்கூட்டம் இந்தியாவின் தலைமையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago