முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டோமொபைல் உற்பத்தி துறை: தமிழகம் முதலிடம்

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை,ஆக.19 - ஆட்டோமொபைல் துறையில் தமிழகம் உலக தொழில் மையமாக மாற்றப்படும் என்றும், இந்த துறையில் தற்போது தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.  பேரவையில் நடைபெற்ற தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட தே.மு.தி.க. உறுப்பினர் பாண்டியராஜன் பேசும் போது, தொழில்துறைக்கு தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் 1.7 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர், தற்போது நடைபெற்று வருவது மானியக் கோரிக்கை மீதான விவாதம் மட்டுமே. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் அல்ல. தொழில்துறையை சேர்ந்தவர்கள் எவ்வளவு முதலீடு செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றார். 

இதற்கு பதிலளித்த பாண்டியராஜன், போர்டு உள்ளிட்ட நிறுவனங்கள் முதலில் தமிழகத்தில்தான் தொழிற்சாலைகளை தொடங்கின. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக போர்டு உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய தொழிற்சாலைகள் குஜராத்துக்கு இடம் பெயர்ந்துள்ளன என்றார். இதற்கு பதிலளித்த முதல்வர், 

பேரவை உறுப்பினர் குஜராஜ், மகராஷ்டிரம் போன்ற மாநிலங்களை தெரிந்து வைத்துள்ள அளவுக்கு தமிழ்நாடு குறித்து தெரிந்து வைத்திருக்கவில்லை. போர்டு, நிஸ்ஸான், பி.எம்.டபிள்யூ உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்கியுள்ளன. ஆட்டோமொபைல் உற்பத்தி, ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. வரும் 5 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறையில் உலக தொழில்மையமாக தமிழகம் மாற்றப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!