முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையிலிருந்து ஒகேனக்கல்லுக்கு இரவில் சொகுசு பஸ்-செந்தில்பாலாஜி பதில்

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 20 - சென்னையிலிருந்து ஒகேனக்கல்லுக்கு இரவில் சொகுசு பஸ் விடப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி பதில் நேரத்தின்போது  பெண்ணாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.நஞ்சப்பன் கேட்ட கேள்வியில் சென்னையிலிருந்து ஒகேனக்கல்லுக்கு மிதவைப் பேருந்து இரவில் இயக்க ஆவன செய்யப்படுமா என்றார். இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பதில் வருமாறு:​ சென்னையில் இருந்து தர்மபுரிக்கு 345 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. தற்போது சென்னையில் இருந்து சேலம் வழியாக தர்மபுரிக்கு அரசு சொகுசு பஸ் செல்கிறது. பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப தர்மபுரி வரை இந்த பஸ் இயக்கப்படுகிறது. அங்கிருந்து உள்ளூர் பஸ்கள் ஒகேனக்கல் செல்கின்றன. விரைவில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க முதல்​அமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார். பஸ்கள் வந்ததும் முதல்​அமைச்சர் அனுமதியுடன் சென்னையில் இருந்து ஒகேனக்கல்லுக்கு நேரடி சொகுசு பஸ் விட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். சட்டசபையில் நேற்று கேள்வி பதில் நேரத்தின்போது ஏற்கனவே கேள்வி கேட்ட பல உறுப்பினர்கள் மீண்டும் துணை கேள்வி கேட்க வாய்ப்பு அளிக்கும்படி கைகளை உயர்த்தினார்கள். அப்போது, சபாநாயகர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:​ முதன் முதலாக துணைக்கேள்வி கேட்கும் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
சட்டசபையில் நேற்று கேள்வி பதில் நேரத்தின்போது சோழிங்கநல்லூர் தொகுதி கொட்டிவாக்கம் முதல்  சோழிங்கநல்லூர் கெனால் பகுதி வரை உள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்தி புதிய பாலம் கட்டித்தரப்படுமா? என்று கே.பி.கந்தன் (அ.தி.மு.க.) கேள்வி எழுப்பினார்.
இதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் அளித்த பதில் வருமாறு:​ உறுப்பினர் குறிப்பிட்ட இடத்தில் ரூ.3 கோடியே 30 லட்சம் செலவில் ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன்படி 6 இடங்களில் பாலம் கட்டப்படும்.
இவ்வாறு  அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago