முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ்காந்தி கொலை வழக்கு:மூவருக்கும் வாழ்நாள்சிறை - மணிசங்கர்அய்யர்

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

கும்பகோணம்,செப்.- 5 - ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் அதற்கு பதிலாக அவர்கள் சாகும் வரை சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது,  ஒவ்வொரு ஊராட்சியிலும் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட வேண்டும். குறிப்பாக இளைஞர் காங்கிரசார் பெருமளவு இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை உடனே தொடங்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவர் மற்றும் இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 32 பேரையும் அவர்கள் இயற்கையாகவே சிறையில் மரணம் அடையும் வரை தண்டனை அளிக்க வேண்டும். தீவிரவாதி அஜ்மல் கசாப்பையும் இது போலவே வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்.
உலகில் உள்ள 139 நாடுகளில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. 23 நாடுகளில்தான் இந்த தண்டனை உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 22 நாடுகளில் 67 பேரை தூக்கிலிட்டுள்ளனர். இந்தியாவில் ஒருவர் கூட தூக்கிலிடப்படவில்லை. ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டாம் என்றால் அவர்கள் ஆயுள் தண்டனை பெற்று மீண்டும் வெளியே வந்தால் அவர்களால் வேறு பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago