முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு திட்டங்களை அமல்படுத்தும் கல்வித்தாய் முதல்வர்

புதன்கிழமை, 7 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.​7  - மாணவ​, மாணவியர் மற்றும் ஆசிரியர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி சீரிய முறையில் அமல்படுத்தும் கல்வித்தாய் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவின்போது 370 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக முதல்வராக 3வது முறையாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா, கல்வித்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புரட்சிகர திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். ஆசிரியரல்லாத பணியாளர் கடந்த 91ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு இப்போது தான் ஆசிரியரல்லாத பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அது தவிர, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. மாணவர்களுக்கு  இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இலவசமாக சீருடைகள் வழங்கப்படுகிறது. மாணவிகளுக்கு முதன்முதலாக சைக்கிள் கொடுத்து சாதனை படைத்தவர் முதல்வர் ஜெயலலிதா. இதனைத்தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கி சாதனை படைத்தவர்.
கல்விக்கண் திறந்தவர் காமராஜர். அதைவிட ஒரு படி மேலே சென்று, பல்வேறு புரட்சிகர திட்டங்களை அமல்படுத்தி வரும் கல்வித்தாய் நமது முதல்வர் ஜெயலலிதா.
இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா பேசும்போது, வழக்கமாக துறை குறித்து ஆய்வுப்பணி அரைமணி நேரமே நடைபெறும். ஆனால், முதல்வர் ஜெயலலிதா, இந்த துறைக்காக 2 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டு, பல உத்தரவுகளை வழங்குகிறார். தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல்மாநிலமாக திகழ வேண்டும என முதல்வர் விருமபுகிறார். இதற்கு ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago