முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பில் 11 பேர் பலி

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, செப்.8 - டெல்லி ஐகோர்ட்டு நுழை வாயில் அருகே நேற்று பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 11 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். எப்போதும் பரபரப்பாக காணப்படும் டெல்லி ஐகோர்ட்டு பகுதியில் நேற்று காலை வழக்கமான பணிகள் துவங்குவதற்கு முன்பாக வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் ஐகோர்ட்டில் நுழைவதற்கான அனுமதிச் சீட்டுக்களை பெற்று 5-வது நுழைவாயில் வழியாக உள்ளே சென்று கொண்டிருந்தனர். நேற்று காலை 10.15 மணிக்கு 5-வது நுழைவாயில் அருகே பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அதிக சக்திவாய்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 80 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் தீ அணைப்பு படையினர், போலீஸ் படையினர், மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். குண்டு வெடித்த பகுதியில் மனிதர்களின் கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் சிதறி கிடந்தன. ஒரே ரத்தக் காடாக அந்த இடம் காட்சி அளித்தது.  படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்பு படையினர் உடனுக்குடன் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் டெல்லி போலீஸ் கமிஷனர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அந்த இடத்தை பார்வையிட்டார். ஐகோர்ட்டில் நேற்று பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. குண்டு வெடித்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

இது தீவிரவாதிகள் நடத்திய சம்பவம்தான் என்பதை மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் உறுதி செய்தார்.

இந்த சம்பவம் நடந்த பகுதியில் தேசிய பாதுகாப்பு படை, தேசிய உளவுத்துறை மற்றும் தடயவியல் துறையை சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாய்களைக் கொண்டு வேறு இடங்களில் ஏதேனும் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனவா? என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.  பலியானவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களில் பெரும்பாலோர் ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்குகளில் தொடர்புடைய வர்கள்தான் அதிகமாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.

குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் டெல்லி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன. 

டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.

குண்டு வெடித்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள அப்சல்குருவை விடுதலை செய்யாவிட்டால் இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என்று அந்த தீவிரவாத குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வெடிகுண்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் டெல்லி லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனை,  அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மருத்துவ மனை ( எய்ம்ஸ்)  ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இவர்களில் சிலரது நிலைமை அபாய கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

குண்டு வெடிப்பு நடந்த இடம் ஐகோர்ட்டில் நுழைவதற்கான அனுமதிச்சீட்டுகளை வரிசையில் நின்று பெறுவதற்கான இடம் என்பதால் அங்கு அவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த அனுமதிச்சீட்டு வழங்கும் வரவேற்பு அறை அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேசில்தான் வெடி குண்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவ இடத்தை யாரும் நெருங்காதபடி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 25 ம் தேதி இதே ஐகோர்ட்டுக்கு வெளியே ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.  ஆனால் அந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு இப்போது இரண்டாவதாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

குண்டு வெடித்தபோது மக்கள் இடையே பெரும் பீதியும் பதட்டமும் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். குண்டு வெடித்த பகுதியில் கரும் புகை சூழ்ந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ரத்த வெள்ளத்தில் பலர் துடித்துக்கொண்டிருந்ததை தங்களால் பார்க்க முடிந்தது என்றும் அவர்கள் கூறினர். படுகாயம் அடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்க அவர்களது உறவினர்கள் அந்த மருத்துவ மனைகளின் முன்பு கூட்டமாக கூடி கதறி அழுது கொண்டிருந்தனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago