முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரண்பேடி - கெஜ்ரிவால் மீதான உரிமை மீறல் வாபஸ்

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,செப்.9 - கிரண்பேடி, கெஜ்ரிவால் மீதான உரிமை மீறல் நோட்டீஸ்களை காங்கிரஸ் எம்.பி. வாபஸ் பெற்றார். ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ஹசாரே 12 நாள் போராட்டத்துக்குப் பின் வாபஸ் பெற்றார். அப்போது அவரது குழுவை சேர்ந்த கிரண்பேடி, கெஜ்ரிவால், பிரசாந்த்பூஷன், சாந்திபூஷன், நடிகர் ஓம்பூரி ஆகியோர் பேசுகையில், எம்.பிக்களையும், அரசியல்வாதிகளையும் கடுமையாக சாடினர். இதனால் அவர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்டது. 

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. பிரவீண் அரோன், சபாநாயகர் மீராகுமாரை சந்தித்து உரிமை மீறல் நோட்டீஸ்களை வழங்கினார். இந்நிலையில் கிரண்பேடி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 5 பேருக்கும் பாராளுமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதில் எம்.பிக்கள் பற்றிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. நடிகர் ஓம்பூரி மட்டும் அறிக்கை வாயிலாக மன்னிப்பு கேட்டார். மற்றவர்கள் மறுத்து விட்டனர். இந்நிலையில் 5 பேருக்கும் அனுப்பிய உரிமை மீறல் நோட்டீஸ் திடீரென வாபஸ் பெறப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. பிரவீண் அரோன் சபாநாயகரை சந்தித்து தான் கொடுத்த உரிமை மீறல் நோட்டீஸ்களை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!