Idhayam Matrimony

மாறன் சகோதரர்கள் மீது அமலாக்கப்பிரிவும் பாய்கிறது!

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி,அக். - 12 - மாறன் சகோதரர்கள் மீது ஏர்செல், மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கலாநிதி மாறன், தயாநிதி மாறன், அனந்தகிருஷ்ணன், ரால்ப் மார்ஷல் ஆகியோர் மீதும் அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களான சன் டி.வி. மேக்சிஸ், ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்ஒர்க்ஸ் ஆகியவற்றின் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரின் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதே போல் அனந்தகிருஷ்ணனின் பினாமியாக கருதப்படும் சுனிதா ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாறன் சகோதரர்கள் கைது செய்யப்படுவது தவிர்க்க முடியாதது என டெல்லி அரசியல் வட்டாரம் தெரிவித்துள்ளது. கறுப்பு பணத்தை வெள்ளையாக்கியது தொடர்பான விவகாரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உன்னிப்பாக பரிசீலனை செய்து வருகிறார்கள். எனவே வெகு விரைவில் மாறன் சகோதரர்கள் மீது அமலாக்கப் பிரிவு சார்பில் வழக்கு தொடரப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்