முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிநிலையத்துறையினை சிறப்பாக மாற்றுவோம் பரஞ்ஜோதி

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.13- தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி அறநிலையத்துறையை சிறப்பான துறையாக மாற்றி ஆக்ரமிப்புகளை கண்டறிந்து வருவாயை பெருக்க வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சர் பரஞ்ஜோதி ஆலோசனை கூட்டதிதல் பேசினார். அறநிலையத்துறை அதிகாரிகளின் மண்டல இணை ஆணையாளர் சீராய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பரஞ்ஜோதி பேசியதாவது:- நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர்  இந்து சமய அறநிலையத் துறையில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்றும், மேற்கொள்ள நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்  தன்னையும்,  துறை அலுவலர்களையும் அழைத்து பேசி  ஆய்வுகளை மேற்கொண்டு,  முதல்வர் தன்னுடைய மேலான அறிவுரைகளை  தொடர்ந்து வழங்கி வருகிறார். மாண்புமிகு அம்மா அவர்கள் இத்துறையில் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பதை அறிந்து அவைகளை விரைந்து நிறைவேற்றிட நாம் அனைவரும் பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நவ.10 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கூட இத்துறையின் ஆய்வினை முதல்வர் மேற்கொண்டுள்ளார்கள்.   கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பை பொறுத்தவரையில் நாம் உடனடியாக தாமதமில்லாமல் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.   கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யவிடாமல் அதனை பாதுகாக்க வேண்டியது நம்முடைய முக்கியமான பொறுப்பு.    ஆக்கிரமிப்பை அகற்ற என்ன நடவடிக்கையினை மேற்கொள்ளலாம், எவ்வளவு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது  என்பதை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  ஆலயங்களின் பெரும்பாலான வருமானம் பக்தர்களின் காணிக்கை / நன்கொடைகள் மூலமே வருகிறது.  ஆனால், கோயில் சொத்துக்கள் மூலம் பெறப்படும் வருவாய் மிகவும் குறைவாகவே வரப்பெறுகிறது.   அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.  இது தொடர்பான  nullதிமன்றங்களில்  நிலுவையில் உள்ள வழக்குகளின் மீது தனிக் கவனம் செலுத்திட வேண்டும்.       கோவில் நிலங்கள் தொடர்பாக வருவாய்த் துறையின் சமீபத்திய புள்ளி விவரத்தினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.   எந்தக் கோயில் நிலம் யார் பொறுப்பில் உள்ளது,  யார் அனுபவத்தில் உள்ளது.   மாவட்ட வருவாய் அலுவலர் அதிகாரத்திற்குட்பட்டு உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தின் மஈத இச்ஙுஙுடீஷசிடுச்டூ பண்ணலாம்.     அறநிலையங்களில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு தலா மூன்று மாவட்டங்களின் பொறுப்பை ஒப்படைக்கலாம். மேலும் இக்கூட்டத்தின் வாயிலாக துறை அலுவலர்களின் முழு ஒத்துழையப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை செயலர் முனைவர் மூ.இராசாராம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சந்திரகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony