முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க அனைத்து கட்சி குழு

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.17 - இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கக்கோரி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து முறையிட அனைத்து கட்சி குழு ஒன்றை தமிழக முதல்வர்  நியமிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழுவில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை  வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
தியாகி  இம்மானுவேல்  சேகரன்  நினைவு  நாளான  செப்டம்பர்  11  அன்று  பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியான வெள்ளச்சாமி,  கணேசன்,  பன்னீர்,  முத்துக்குமார், தீர்ப்புக்கனி,  ஜெயபால்  ஆகியோருக்கும்,  அதற்கு  முன்னர்  சாதிவெறியர்களால் படுகொலை  செய்யப்பட்ட  மண்டலமாணிக்கம்,  பச்சேரி  கிராமத்தைச்  சேர்ந்த  பள்ளி மாணவன்  பழனிகுமாருக்கும்  விடுதலைச்  சிறுத்தைகள்  வீரவணக்கம்  செலுத்துகிறது.   அத்துடன்  அவர்தம்  குடும்பத்தினர்  அனைவருக்கும்  விடுதலைச்  சிறுத்தைகளின்  இந்த மாநிலச்  செயற்குழு  ஆழ்ந்த  இரங்கலைத்  தெரிவித்துக்கொள்கிறது.
இந்த சம்பவத்துக்கு காரணமான காவல்துறை  மற்றும்  வருவாய்த்  துறை அதிகாரிகளை  தமிழக  அரசு  பணியிடை  நீnullக்கம்  செய்ய  வேண்டும்  எனவும்,  அத்துடன் அவர்கள்  மீது  வன்கொடுமைத்  தடுப்புச்  சட்டத்தின்கீழ்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும் எனவும்,  படுகொலையானோரின்  குடும்பத்தினருக்கு  தலா  ரூ.  10  இலட்சம்  இழப்பீடு வழங்க  வேண்டும்  எனவும்  இச்செயற்குழு  தமிழக  அரசை  வற்புறுத்துகிறது.   
நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில்  வெற்றி  பெற்ற விடுதலைச்சிறுத்தைகள்  அனைவருக்கும்  இந்த  மாநிலச்  செயற்குழு  மனமார்ந்த  வாழ்த்துகளயும்,  பாராட்டுகளயும் தெரிவித்துக்  கொள்கிறது.
தமிழீழ  விடுதலைப்  புலிகளுக்கும்,  சிங்களபெளத்த  பேரினவாத ஆட்சியாளர்களுக்குமிடையில்  சமாதானப்  பேச்சுவார்த்தை  மேற்கொண்ட  நார்வே  அரசு   அண்மையில்  வெளியிட்டுள்ள  அறிக்கை  ஒன்றில்,  ஈழச்  சிக்கலில்  அரசியல்ரீதியான தீர்வு  காண்பதற்கு  இந்திய  அரசு  ஆர்வம்  காட்டவில்லை  என்பதையும்,  தமிழீழ விடுதலைப்  புலிகளை  அழித்தொழிக்க  வேண்டும்  என்பதிலேயே  முனைப்பாக செயல்பட்டது  என்பதையும்  சுட்டிக்காட்டியுள்ளது.    தமிழ்  இனத்திற்கும்,  தமிழீழத்திற்கும் எதிராக  தொடர்ந்து  செயல்பட்டு  வரும்  இந்திய  அரசின்  போக்கை  விடுதலைச்  சிறுத்தைகள் மிக  வன்மையாகக்  கண்டிக்கிறது.    அத்துடன்  இந்திய  அரசின்  தமிழின  விரோதப் போக்கை  உறுதிப்படுத்தியுள்ள  நார்வே  அரசின்  அறிக்கை  தொடர்பாக,  இந்திய  அரசு அனைத்துலக  சமூகத்திற்கு  உரிய  விளக்கம்  அளித்திட  வேண்டும்  என  விடுதலைச் சிறுத்தைகளின்  இம்மாநிலச்  செயற்குழு  வலியுறுத்துகிறது.
சிங்கள  இனவெறிக்  காடையர்களால்  தமிழக  மீனவர்கள்  கடந்த  கால்  நூற்றாண்டுக்கும் மேலாக  தொடர்ந்து  தாக்கப்படுவதும்  படுகொலை  செய்யப்படுவதும்  நீnullடித்து  வருகிறது.   அண்மையில்  இந்திய  பிரதமர் மன்மோகன்  சிங்கும்,  சிங்கள இனவெறி  அரசின்  அதிபர்  இராஜபக்சேவும்  தமிழக  மீனவர்கள்  தாக்கப்படுவது  தொடர்பாக கலந்துரையாடிய  பின்னரும்  சிங்களப்  படையினரால்  தமிழக  மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.    தமிழக  மீனவர்களுக்கு  எதிரான  சிங்கள  இனவெறியர்களின் தொடர்ச்சியான  காட்டுமிராண்டித்தனத்தை  விடுதலைச்  சிறுத்தைகள்  மிக  வன்மையாகக் கண்டிக்கிறது.  இது தொடர்பாக  பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து  முறையிடுவதற்கு  தமிழக  அரசு அனைத்துக்  கட்சிக்  குழு  ஒன்றை  நியமிக்க  வேண்டும்  எனவும்  விடுதலைச்  சிறுத்தைகள் தமிழக  அரசைக்  கேட்டுக்கொள்கிறது.
ராஜீவ்  காந்தி  கொலை  வழக்கில்  கொலைத்  தண்டனை  விதிக்கப்பட்டுள்ள  சாந்தன், முருகன்,  பேரறிவாளன்  ஆகியோர்  20  ஆண்டுகளுக்கும்  மேலாக  சிறைப்பட்டுள்ள நிலையில்  அவர்கள்  மீதான  கொலைத்  தண்டனையை  விலக்குவதற்கு  தமிழக  அரசு அமைச்சரவைத்  தீர்மானம்  நிறைவேற்றி,  ஆளுநருக்குப்  பரிந்துரை  செய்ய வேண்டுமென  விடுதலைச்  சிறுத்தைகளின்  மாநிலச்  செயற்குழு  தமிழக முதல்வருக்கு  வேண்டுகோள்  விடுக்கிறது.
கூடங்குளம்  பகுதி  மக்களின் உணர்வுகளை  மதித்து  அவ்வணுமின்  உலைத்  திட்டத்தை  முற்றிலுமாக  கைவிட வேண்டுமெனவும்  ஏற்கனவே  இந்தியாவில்  இயங்கி  வருகிற  அணுமின்  உலைகளையும் விரைந்து  மூட  வேண்டுமெனவும்  விடுதலைச்  சிறுத்தைகள்  இந்திய  அரசை  வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.  
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்