முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் தமிழக பகுதிகளுக்கு செல்லும் புதுவை பஸ்களில் கட்டண உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, நவ.20- தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளுக்கு கிலோ மீட்டருக்கு 28 காசில் இருந்து 42 காசாகவும், விரைவு பஸ்களுக்கு 32 காசில் இருந்து 56 காசாகவும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களுக்கு 52 காசில் இருந்து 70 காசாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த கட்டண உயர்வு கடந்த 17-ந் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. 

தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயர்த்தப்படும் போதெல்லாம் புதுவையிலும் உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி முதல் கட்டமாக புதுவையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுவையில் இதுவரை புறநகர் பகுதிகளுக்கு கிலோ மீட்டருக்கு 27 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது இந்த கட்டணண் 42 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் படி கிலோ மீட்டருக்கு 15 காசு உயர்த்தப்பட்டுள்ளது.  இதனால் புதுவையில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் அனைத்து அரசு பஸ்களிலும், தனியார் பஸ்களிலும் இந் கட்டண உயர்வு நேற்று அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு கடலூருக்கு பஸ் கட்டணம் 7 ரூபாயாக இருந்தது. தற்போது 11 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல விழுப்புரத்திற்கு ரூ.12-ல் இருந்து ரூ.15 ஆகவும், திண்டிவனத்துக்கு ரூ.11.50-ல் இருந்து ரூ.17 ஆகவும், திருவண்ணாமலைக்கு ரூ.31.50-ல் இருந்து ரூ.47 ஆகவும், சென்னைக்கு ரூ.55-ல் இருந்து ரூ.97 ஆகவும் உயர்ந்துள்ளது.  அதே நேரத்தில் புதுவை மாநிலத்திற்குள் ஓடும் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. விரைவில் இந்த கட்டணமும் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டண உயர்வு குறித்து புதுவை மாநில அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கிரேஷ்குமார் தினபூமி நிருபரிடம் கூறியதாவது:- மோட்டார் வாகன சட்டப்படி ஒரு மாநிலத்தின் பஸ்கள் மற்ற மாநிலத்திற்குள் செல்லும் போது, அந்த மாநிலத்தில் உள்ள கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும். எனவே தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் தமிழகத்திற்கு செல்லும் பஸ்களுக்கு மட்டும் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம். புதுவை மாநிலத்திற்குள் ஓடும் பஸ்களுக்கு பழைய கட்டண முறையே நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!