முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை பக்தர்களுக்கு உதவ வெளிமாநில டாக்டர்கள் கேரள அரசு ஏற்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம், நவ. 20- சபரிமலைக்கு செல்லும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு மருத்துவ சேவை வழங்க வெளிமாநில டாக்டர்களை வரவழைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரள மாநிலத்தில் உலகப் புகழ் பெற்ற ஆலயமாக திகழ்வது சபரிமலை ஸ்ரீஐயப்பன் ஆலயமாகும். ஆண்டுதோறும் இந்த கோயிலுக்கு கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து சென்று ஐயப்பனை கண்குளிர தரிசனம் செய்து வருகிறார்கள். இதற்காக கேரள அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது வழக்கம். மருத்துவ சேவைகளையும் கேரள அரசு வழங்கி வருகிறது.  இந்த நிலையில் தங்களுடைய ஊதிய விகிதத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சபரிமலை சேவையை புறக்கணிப்போம் என்று கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து இந்த மிரட்டலை சமாளிக்கும் வகையில் கேரள அரசும் ஒரு முடிவெடுத்துள்ளது. அதாவது சபரிமலை பக்தர்களுக்கு மருத்துவ சேவை வழங்க அண்டை மாநிலங்களில் இருந்து டாக்டர்களை வரவழைக்க முடியுமா? என்பது குறித்து ஆராயுமாறு அதிகாரிகளுக்கு கேரள சுகாதார அமைச்சர் அடூர் பிரகாஷ் அதிரடி உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்ல, காண்டிராக்ட் அடிப்படையில் சபரிமலை சீசன் முடியும் வரை உடனடியாக டாக்டர்களை நியமிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அடூர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு கேரள அரசுக்கு நெருக்கடி ஏற்படுவது இது 2 வது முறை என்று கூறப்படுகிறது. இருப்பினும் பக்தர்களின் வசதிக்காக வெளிமாநில டாக்டர்களை வரவழைப்பது என்ற விஷயத்தில் கேரள அரசு உறுதியாக உள்ளது. கேரளாவில் தற்போது ஐயப்ப சீசன் தொடங்கியுள்ளது. இதையொட்டி அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவியத் தொடங்கி உள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago