முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் பிரசாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது: ஐகோர்ட்தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 22 - நடிகர் பிரசாந்துக்கும், கிரகலட்சுமிக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு வருடத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். குழந்தை பிரசவத்திற்காக கிரகலட்சுமி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பல முறை பிரசாந்த் தன்னுடன் வாழ கிரக லட்சுமியை அழைத்தும் அவர் வரமறுத்து விட்டார். இதையடுத்து கிரக லட்சுமியை அவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிடும்படி பிரசாந்த் சென்னை உயர்நீதி மன்ற குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் கிரகலட்சுமிககும், வேணு பிராசாந்த் என்பவருக்கும் ஏற்கனவே 1998-ல் திருமணம் நடந்த விபரம் அவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து மனுவை வாபஸ் பெற்றார். தனக்கும் கிரகலட்சுமிக்கும் நடந்த திருமணம் செல்லாது என உத்தரவிடக்கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்தார். கிரகலட்சுமியும், வேணு பிரசாந்தும் திருமணத்தை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த ஆதாரத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், முதல் திருணத்தை கிரகலட்சுமி மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் பிரசாத் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது என தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கிரக லட்சுமி சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். திருமணம் செல்லும் என உத்தரவிடும்படி கோரினார். இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீபதிகள் மோகனராம், அக்பர் அலி பெஞ்சு முன்னணியில் நடந்தது. பிரசாந்த் சார்பில் வக்கீல் ஆனந்தன், கிரகலட்சுமி சார்பில் வக்கீல் மோகன் ஆஜர் ஆனார்கள். 2 வருடமாக விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். முதல் திருமணத்தை மறைத்து கிரகலட்சுமி நடிகர் பிரசாந்தை திருமணம் செய்தது செல்லாது என்று குடும்ப நல கோர்ட் வழங்கிய தீர்ப்பை நீதிபதிகள் உறுதிபடுத்தி மீண்டும் தீர்பளித்தனர். கிரகலட்சுமி அப்பீல் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!