டெல்லி மாணவி படுகொலையில் முக்கிய குற்றவாளி கைது

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      இந்தியா
killer 0

 

புதுடெல்லி,மார்ச்.- 13 - டெல்லி கல்லூரி மாணவி சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உலக மகளிர் தினத்தன்று டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ராதிகா தன்வார் நடந்து சென்று கொண்டியிருந்தபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மகளிர் தினத்தன்று அதுவும் பட்டப்பகலில்  மாணவி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு டெல்லியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையொட்டி ராதிகாவை சுட்டுக்கொன்றவரை பிடிப்பதில் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தப்ரெஜ்,அஷரப் ஆகிய இருவரையும் கைது செய்து பிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ராம் சிங் என்ற விஜய் என்பவரை போலீசார் கைது செய்தனர். 

இவன்தான் ராதிகாவை சுட்டுக்கொலை செய்திருக்கலாம் என்று உறுதியாக தெரிகிறது. முதலில் கைது செய்யப்பட்ட தப்ரெஜி, அஷரப் ஆகிய இருவரும் உத்திரப்பிரதேச மாநிலத்தை சீதாபூர் நகரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. ராதிகா சுட்டுக்கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து அதாவது கடந்த மார்ச் 10-ம் தேதி டெல்லியில் இருந்து விஜய் தப்பிச்செல்ல இந்த 2 பேரும் உதவி செய்தது தெரியவந்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்: