முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரிய வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் பலி

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

அபுஜா, டிச. 27 - ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தேவாலயங்களை குறி வைத்து இஸ்லாமிய பழமைவாத அமைப்பினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். தேவாலயங்களில் கிறிஸ்துமசை மக்கள் கொண்டாடி கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. நாட்டின் வடக்கு பகுதி நகரான மடல்லாவுக்கு அருகில் உள்ள செயிண்ட் தெரசா தேவாலயத்தில் சக்திவாய்ந்த குண்டு முதலில் வெடித்தது. இதில் 27 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போகோ ஹரம் தீவிரவாதிகள் தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவம் நிகழ்ந்த சில நிமிடங்களில் ஜோஸ் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் அடுத்த குண்டு வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்தனர். இவ்விரு குண்டுவெடிப்புகள் நடந்த அதே வேளையில் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சில நகரங்களில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. கடந்த சில தினங்களில் மட்டும் அவர்கள் நடத்திய தாக்குதலில் 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்