முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

`தானே' புயல் எதிரொலி: பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் கட்

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.30 - தமிழ் நாட்டில் சூறாவளி காற்றுடன் மழை பெய்யும் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாதென பள்ளிகள் கல்வித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வுகள் முடிவுற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மாணவ, மாணவியர்களுக்கு, குறிப்பாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக் கூடாதென ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள `தானே'  புயலின் காரணமாக நேற்றும் (29.12.2011) மற்றும் இன்றும் (30.12.2011) சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. எக்காரணத்தை முன்னிட்டும் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் மாணவர் சார்பான நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தக் கூடாதென மீண்டும் வலியுறுத்தி தெரிவிக்கப்படுகிறது. மாவட்டங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவில்லை என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்