முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

77 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,டிச.30 - 77 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து மதுரையில் மாவட்ட கலெக்டர் சகாயம் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மதுரை மாவட்ட பொறுத்தவரை பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுதான் நினைவிற்கு வரும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வரும் இந்த ஜல்லிக்கட்டுக்கு கடந்த சில ஆண்டுகளாக பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பெருத்த போராட்டத்திற்கு பிறகே அனுமதி கிடைக்கிறது. இதற்கு காரணம் ஜல்லிக்கட்டின் போது வீரர்கள் இறப்பது, பலர் காயம் அடைவது. மாட்டை சித்திரவதை செய்வது என இந்த புகார்களால் மத்திய அரசின் மிருக வதை அமைச்சகம் அனுமதி மறுத்து வந்தது. கடந்த ஆண்டு இதே ஏற்பட்ட போது மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த ஜவகர் டெல்லி சென்று சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனைகளுடனான அனுமதி பெற்று வந்தார். இதைதொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஆண்டு அதைவிட பெருத்த சோதனை இந்த ஜல்லிக்கட்டுக்கு ஏற்பட்டது. அதாவது மத்திய அரசின் மிருகவதை துறை அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ் மாடுகள் காட்டு விலங்கு இதை துன்றுத்த கூடாது என்று ஒரு உத்தரவை போட்டுவிட்டு சென்று விட்டார்.

   இது தான் ஜல்லிக்கட்டு நடத்துபவர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கலெக்டர் ஜல்லிக்கட்டு நடத்தும் கிராம  பெரியவர்களை வரவழைத்து தான் எதுவும் செய்ய முடியாது. தாங்கள் கூறும் கருத்துக்களை அரசுக்கு அனுப்பி வைக்கிறேன் எனறு கூறி விட்டார். இதனால் ஏமாற்ற அடைந்த கிராமத்தினர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் அளித்த இடைக்காலதடை உத்தரவின் கீழ் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசன நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்