2-வது டெஸ்ட் போட்டி இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரிட்சை

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

சிட்னி, ஜன. - 3 - இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் இன்று துவங்குகிறது. இதி ல் இந்திய அணி ஆஸி.க்கு பதிலடிகொடுக்குமா?  கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மைக்கேல் கிளார்க் தலை மையிலான அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.  ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் போட்டி கடந்த வாரம் மெல்போர்ன் நகரில் நடந்தது.மெல்போர்ன் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரே லிய அணி 122 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்  மூலம் இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது. மெல்போர்ன்  ஆடுகளிம் பந்து வீச்சிற்கு ஏற்ற வகையில் இருந்தது. இதனால் இரு அணி பேட்ஸ்மேன்களும் ரன் எடுக்க திணறினர். இந்த ப் போட்டி மொத்தத்தில் குறைந்த ஸ்கோரைக் கொண்ட போட்டி யாக இருந்தது. இந்திய அணி சார்பில், டெண்டுல்கர், சேவாக் , தோனி மற்றும் அஸ் ன்  ஆகியோர் மட்டும் சிறிது தாக்குப் பிடித்தனர். காம்பீர், விராட் கோக்லி ஏமாற்றம் அடைந்தனர்.  இந்திய அணியின் பலமே பேட்டிங் தான். இந்திய அணியில் 7 பேர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர். எனவே இந்திய அணி மீண்டெழுந்து ஆஸ்திரேலிய அணிக்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியில் மூத்த வீரர்களான ரிக்கி பாண்டிங் மற்றும் மைக் ஹஸ்சே இருவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர். கேப்டன் மை க்கேல் கிளார்க், வாட்சன் ஆகியோர் அவர்களுக்கு பக்ககபலமாக ஆடி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் இளம் பந்து வீச்சாளர்கள் கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடிந் தத்தனர். எனவே அவர் கள் முழு உற்சசாககத்துடன் இந்தப் பேட்டியில் களம் இறங்குகின்றனர். இந்திய அணியில் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வின் மூவரும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இருந்தாலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.
மெல்போர்ன் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது ரசிக ர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் இதற்காக புதிய வியூகம் அமைத்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி நியோ கிரிக்கெட் சேனல் மற்றும் தூர்தர்ஷன் தொலைக் காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: