சென்னை ஓபன் டென்னிஸ் ஜப்பான் வீரர் சோய்டாவிடம் வாரிங்கா அதிர்ச்சி தோல்வி

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

சென்னை, ஜன.- 7 - சென்னையில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான வாரிங்கா, ஜப்பான் வீரர் கோ சோய்டாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து காலிறுதிப்போட்டியிலேயே வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் மிலோஸ் ரோனிக் வெற்றி பெற்று அரையிறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காலிறுதிப்போட்டிகள் நடந்தன. முதல் ஆட்டத்தில் இஸ்ரேல் வீரர் டுடி சேலாவும், கனடா வீரர் மிலோஸ் ரோனிக்கும் மோதினர். உலக ரேங்கிங்கில் 31வது இடம்பிடிக்கும் ரோனிக், 94வது இடம்பெற்றுவரும் சேலாவுடன் முதல்செட்டில் கடுமையாக போராட வேண்டியிருந்தது. டைபிரேக்கர் வரை இழுத்துச்சென்ற இதில் ரோனிக் 7க்கு6 (7க்கு4 டை பிரேக்கர் புள்ளிகள்) என்ற கேம்களில் முதல் செட்டை வென்றார். 2வது செட்டில் அபாரமாக விளையாடிய ரோனிக் அதனை 6க்கு3 என கைப்பற்றினார். முடிவில் ரோனிக் 7க்கு6, 6க்கு3 என்ற கேம்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மிக முக்கியமான காலிறுதிப்போட்டி ஒன்றில் நடப்பு சாம்பியனான ஸ்டானில்ஸஸ் வாரிங்கா ஜப்பான் வீரரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஒற்றையர் முதல் சுற்றில் பை பெற்று 2வது சுற்றில் பிரான்ஸ் வீரர் ரோஜர் வாசலினிடம் கடுமையாக போராடி வென்ற வாரிங்கா(சுவிட்சர்லாந்து) நேற்று நடந்த காலிறுதிப்போட்டியில் ஜப்பான் வீரர் கோ சோய்டாவை எதிர்கொண்டார். சோய்டா முதல் சுற்ற்றில் பிரெடிரிகோ கில்லை தோற்கடித்தும், 2வது சுற்றில் இவான் டோடிக்கை தோற்கடித்தும் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் வாரிங்காவை எதிர்கொண்டார்.
ஆட்டம் துவங்கியது முதலே தனது அதிரடி தாக்குதல்களாலும், அபார சர்வீஸ்களாலும் புள்ளிகள் குவித்த சோய்டா முதல் செட்டை 6க்கு4 என வென்று வாரிங்காவை திணறச்செய்தார். ஆனால் 2வது செட் ஆட்டத்திலும் வாரிங்கா எவ்வளவோ போராடியும் சோய்டாவின் வெற்றியை தடுக்க முடியவில்லை. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கோ சோய்டா 6க்கு4, 6க்கு4 என்ற கேம்களில், நேர் செட்டில் வெற்றி கண்டார். இந்த வெற்றி மூலம் சோய்டா அரையிறுத்திக்கு முன்னேறினார். நடப்பு சாம்பியனான ஸ்டானிஸ்லஸ் வாரிங்கா, காலிறுதிப்போட்டியிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். இன்று ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுக்கான அரையிறுதிப்போட்டிகள் நடக்கின்றன. இரட்டையர் பிரிவுக்கான அரையிறுதிப்போட்டி ஒன்றில் மகேஷ் nullபதி... ரோகன் போபண்ணா ஜோடி, ஜோனாத்தன் எல்ரிச் ... ஆன்டிராம் ஜோடியுடனும், மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் லியாண்டர் பயஸ் ... ஜான்கோ திப்சரவிக் ஜோடி, ஸ்காட் லிப்ஸ்கி ...ராஜீவ்ராம் ஜோடியுடனும் மோதுகிறது.
.....

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: