முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி - ராசாவுக்கு 7 ஆண்டு சிறைக்கு வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 5 ஜூன் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 6 - கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி முறைகேடாக கைமாறிய விவகாரத்தில் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் ஆ. ராசாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு வலியுறுத்தி உள்ளது. 

நாட்டையே உலுக்கிய ஊழல் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். தி.மு.க.வின் இந்த ஊழலால் நாட்டுக்கு ரூ. 1.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்த ஊழலில் ஒரு பகுதியாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரமும் பின்னாளில் அம்பலமானது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி எம்.பி, உள்ளிட்ட 10 பேர் மீதும் 9 நிறுவனங்களின் அதிகாரிகள் மீதும் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தொடர்பாக 4 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சிக்கிய கனிமொழியும், ராசாவும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களாக நீதிமன்றத்தில் விவாதம் நடந்து வந்தது. இந்த விவாதம் நேற்றோடு ஒரு முடிவுக்கு வந்தது. முன்னதாக இது தொடர்பாக அமலாக்க பிரிவினர் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் குற்றத்தை மூடி மறைக்க முயற்சி செய்ததற்காக கனிமொழி, ராசாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும். மற்றும் அபராதமும் விதிக்க வேண்டும் என்று அமலாக்க பிரிவு சார்பில் வழக்கறிஞர் வலியுறுத்தினார். மேலும் இவர்களுக்கு ஜாமீன் வழங்கவே கூடாது என்றும் வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!