டேவிஸ் கோப்பை: லியாண்டர் பயஸ் பங்கேற்கவில்லை

வெள்ளிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.09 - இந்தியா-செர்பியா அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மூத்த வீரரான லியாண்டர் பயஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்கவில்லை என அகில இந்திய டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

டேவிஸ் கோப்பை போட்டி வரும் செப்டம்பர் 12 முதல் 14 வரை பெங்களூரில் நடைபெறவுள்ளது. பயஸ் தனது மனைவியிடம் இருக்கும் மகளை தன்னோடு அனுப்பி வைக்க வேண்டும் எனக்கூறி நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு, போட்டி நடைபெறும் நேரம் நேரத்தில் விசாரணைக்கு வரும் என்பதாலேயே அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: