முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள்: 'உடன்பிறப்பே வா' நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 14 ஜூலை 2025      தமிழகம்
CM-1 2025-06-28

Source: provided

சென்னை : தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள் என்று நேற்று நடைபெற்ற 'உடன்பிறப்பே வா' நிகழ்வில் 3 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து ஆலோசித்து வருகிறார். தினமும் 3 சட்டசபை தொகுதிகளை சார்ந்த ஒன்றிய நகர பேரூர், பகுதி கழக செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் ஆகியோரை அழைத்து தனித்தனியாக தொகுதி நிலவரங்களை கேட்டறிகிறார். அந்த வகையில் ஏற்கனவே 36 தொகுதிகளை சார்ந்த நிர்வாகிகளிடம் தொகுதி நிலவரங்களை கேட்டறிந்துள்ளார்.

கட்சி நிர்வாகிகள் செயல்படும் விதம் குறித்தும் எம்.எல்.ஏ.வின் செயல்பாடு குறித்தும் இந்த கள ஆய்வில் கேட்டு இருக்கிறார். நிர்வாகிகள் செய்யும் தவறுகளையும் புள்ளி விவரத்துடன் சுட்டிக்காட்டுகிறார். ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தை வலுப்படுத்தவும் திமுக உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரபடுத்தவும் கேட்டுக்கொள்கிறார்.

அந்த வகையில் நேற்று கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, குன்னூர் ஆகிய சட்டசபை தொகுதிகளை சார்ந்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்தார். இதில் தொகுதிகளின் வெற்றி நிலவரம் எந்த வகையில் உள்ளது. கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்றும் கேட்டறிந்தார். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறதா? துண்டு பிரசுரங்கள் கொடுக்கிறீர்களா? என்றும் கேட்டறிந்தார். மேலும் தேர்தலுக்கான பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து