Idhayam Matrimony

மதுரையில் செப். 4-ந் தேதி மாநாடு: ஓ.பி.எஸ். தகவல்

திங்கட்கிழமை, 14 ஜூலை 2025      தமிழகம்
OPS 2024-11-11

Source: provided

சென்னை : மதுரையில் வரும் செப்., 4ம் தேதி நடத்தப்படும் மாநாட்டில், எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தர்மயுத்தம், சட்டப்போராட்டத்தை எதற்காக நாம் கையில் எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதில் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய வழியில் தான் நாம் உயிர்மூச்சு இருக்கும் வரையில் பயணிப்போம். 

மதுரையில் செப்டம்பர் 4-ம் தேதி மாநாடு நடத்தப்படும். அதில், எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட இருக்கிறோம். 2 ஆண்டு காலம் எவ்வளவோ கடினமான சூழ்நிலைகள் வந்தன. இருந்தாலும், எங்களின் சக்தியையும், திறமையையும் வெளிக்காட்டவே, ராமநாதபுரம் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டோம். அந்தத் தேர்தலின் நமக்கு விழுந்த ஓட்டுக்களின் மூலம், மக்களின் ஆதரவு நமக்கு தான் இருக்கிறது என்பது வெளிப்பட்டது, இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து