பதவியிலிருந்து விலக முடியாது: பிரதமர் ஷெரீப் பிடிவாதம்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.03 - தமது பதவியிலிருந்து விலக முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் நவாஸ் ஷெரீபும் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் உடனான சந்திப்பின்போது, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நவாஸ் பதவி விலகுமாறு ரஹீல் அறிவுறுத்தியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த துனியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

அதில், தற்காலிகமாக 3 மாத காலம் பதவியில் இருந்து விலகி இருக்கும்படியும், இந்த காலக் கட்டத்தில் தேர்தல் முறைகேடு புகார் குறித்து விசாரணை மெற்கொள்ளலாம் என்றும் ராணுவ தளபதி ஆலோசனை வழங்கியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்தியை பாகிஸ்தான் அரசும் அந்நாட்டு ராணுவமும் மறுத்தன.

இந்த நிலையில் இதற்கு பதில் தரும் விதமாக அரசியல் கட்சிகள் சிலவற்றின தலைவர்கள் உடனான சந்திப்பின்போது அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷேரீப், "நமது அரசியலமைப்பு சட்டத்தை யாரும் சிதைக்க அனுமதிக்க மாட்டேன்" என்று தெரிவித்ததாக தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவோ அல்லது தற்காலிகமாக விடுப்பு எடுத்துக் கொள்ளவோ முடியாது என்று ஷெரீப் குறிப்பிட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: