முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அதிசய பெண்

எல்லா ஹார்ப்பர் எனும் பெண்ணுக்கு ஏற்பட்ட அரிய வகை ஆர்த்தோபெடிக் நிலையால் கால் மூட்டு பின்பக்கமாக திரும்பியது. இதனால் இவர் கால்களை முன்னாள் மடக்கும் வகையில் உருவ நிலை மாற்றம் கொண்டார். இதனால் இவரை ஒட்டக பெண் என அழைத்தனர்.

1908 ஒலிம்பிக் போட்டிக்கு ரஷ்யா 12 நாள்கள் தாமதமாக வந்தது ஏன் தெரியுமா?

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜூலியஸ் சீசர் ஆண்டுக்கு 365 நாட்கள் என கணக்கிடப்பட்ட காலண்டரை பயன்படுத்த உத்தரவிட்டிருந்தான்.  இது லீப் வருடங்கள் உள்ளிட்ட பல்வேறு கால கணித மாறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில் Pope Gregory XIII கால கட்டத்தில் 1582 முதல் கிறித்துவ நாடுகள் கிரிகோரியன் காலண்டர் எனப்படும் நவீன காலமுறைக்கு மாறின. ஆனால் கிறித்துவம் அல்லாத பல நாடுகளும், ரஷ்யா  போன்ற நாடுகளும் அவற்றை ஏற்கவில்லை. இதனால் 1802 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு ரஷ்யா 12 நாட்கள் தாமதமாக வரும்படி நேர்ந்தது.  அதன் பின்னர் போல்ஷெவிக் ஆட்சியின் போது 1918 இல் ரஷ்யாவும் கிரிகோரியன் முறைக்கு மாறியது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன வென்றால், ஒலிம்பிக் பிறந்த தேசமான கிரீஸ் 1923 இல்தான் புதிய காலண்டர் முறைக்கு மாறியது என்பதுதான் சுவாரசியம்.

இனி பயணச்சீட்டு வாங்க சில்லறை வேண்டாம் - க்யூஆர் கோடு போதும்

சென்னையில் விரைவு ரயில், மின்சார ரயில் பயணச்சீட்டுகளை எடுப்பதற்கு கால தாமதத்தை தவிர்க்க, தெற்கு ரயில்வே தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பயணச்சீட்டு வழங்கும் கவுண்ட்டர் அறை அருகே இதை வைத்துள்ளது. இதனை பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களே பயணச்சீட்டு எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பயணிகளின் கூடுதல் வசதிக்காகவும், மேலும் கால தாமதத்தை தவிர்க்கவும், தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தில் 'க்யூ. ஆர்' கோடு மூலமாக பணம் செலுத்தும் வசதியையும், பயணச்சீட்டு பெறும் முறையையும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பயணிகள் 'க்யூ. ஆர்' கோடை ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று கொள்ளலாம். மேலும் மாதாந்திர பயண சீட்டை க்யூஆர் கோடு மூலம் புதுப்பித்து கொள்பவர்களுக்கு 0.5 சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடன ஆசிரியை

சீனா, சோங்சிங் மாநிலத்தில் நடன குழு ஒன்றிற்கு 5 வயது சிறுமி ஒருவர் ஆசிரியையாக உள்ளார். டைலான் ஜிங்யீ என்ற சிறுமி, கடந்த நவம்பரிலிருந்து இந்த நடன குழுவை வழி நடத்தி வருகிறார். டைலான் தனது நடன பயிற்சியை 2 மாதத்தில் முடித்து விட்டு தற்போது நடனஆசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மற்றொறு கோள்

சூரியக்குடும்பத்தில் இதுவரை 9 கோள்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் புளூட்டோவுக்கு கோள்களுக்கான தகுதி இல்லை எனக்கூறி அது நீக்கப்பட்டது.  இந் நிலையில் செவ்வாய் கோள் போன்ற விண்பொருள் ஒன்று சூரியக்குடும்பத்தின் எல்லையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த விண்பொருளின் காந்த விசையை பொருத்தே அது கோளா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சமோசா விற்க ...

மகாராஷ்டிராவை சேர்ந்த முனாப் கபாடியா, தனது தாயார் நபிசா செய்யும் மட்டன் சமோசா மற்றும் உணவுப் பண்டங்களைக்கொண்டு உணவகம் ஒன்றைத் தொடங்க போஹ்ரி கிட்சென் என்ற பெயரில் உணவகம் ஒன்றை மும்பையில் திறந்தார். தனது உணவகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததும் தான் பணிபுரிந்த கூகுள் நிறுவனத்திலிருந்து வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago