முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கற்கால ஓவியங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பாக்கம் மலைத்தொடர் ஒட்டிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது செத்தவரை மலையில் ஆவணம் செய்யப்படாத புதிய பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர்.செத்தவரை ஊரின் தெற்கு மூலையில் செத்தவரை மலைகள் தொடங்கும் இடத்தில் கும்பசுனை என்ற இடத்தில் உள்ள பெரிய பாறையில் இரண்டு இடங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் மற்றும் இதனருகே உள்ள பாறையில் வெண்சாந்து ஓவியமும் இருப்பது கண்டறியப்பட்டது. ஓவியத்தில் மான் ஒன்றும் அதன் அருகே யானை போன்ற ஒரு உருவம் காணப்படுகிறது. மற்றொரு முனையில் உள்ள செஞ்சாந்து ஓவியத்தில் இரு மனிதர்கள் மட்டும் உள்ளனர். மேலும் அருகில் உள்ள மற்றொரு குன்றிலும் ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவையாவும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களாகக் கருதலாம். இதன் காலம் சுமார் 5000 வருடங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

மனிதர்களுக்கு நீல நிறக்கண்கள் எப்போது தோன்றின?

உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கும் நீல நிற கண்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். உள்ளூர் வழக்கில் இதை நாம் பூனைக் கண் என்று குறிப்பிடுவோம். சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் மனிதர்களுக்கு பொதுவாக அடர் பழுப்பு நிற கண்களே காணப்பட்டன. கருங்கடல் பகுதியில் உள்ள மனிதர்களிடம் மரபணுவில் ஏற்பட்ட ஒரு சிறிய மாற்றம் காரணமாக அடர் பழுப்பு நிறத்திலிருந்து நீல நிறக் கண்கள் உருவாகின. இது பின்னர் படிப்படியாக பல்வேறு பிரதேசங்களுக்கும் பரவின. தற்போது உலக மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதம் பேர் பூனை கண் எனப்படும் நீல நிற கண்களுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6.6 கோடி ஆண்டுகள் சிதையாமல் புதைந்திருந்த டைனோசர் முட்டை கரு கண்டுபிடிப்பு

தெற்கு சீனாவில் உள்ள கான்சூவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த டைனோசர் முட்டைக்கரு குறைந்தபட்சம் 66 மில்லியன் (6.6 கோடி) ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அக்கரு பல் இல்லாத தெரொபாட் சைனோசர் அல்லது ஓவிரப்டொரொசராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அக்கருவுக்கு பேபி யிங்லியாங் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. டைனோசர்களுக்கும், நவீன கால பறவைகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்த புரிதலை ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு வழங்குகிறது. கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைக்கரு புதை படிமத்தில், இந்தக் கரு, கை கால்களுக்கு கீழ் தலையை வைத்து சுருட்டிக்கொண்டு இருக்கிறது. பறவைகளின் முட்டையில்தான் குஞ்சு பொறிப்பதற்கு முன் இப்படி நடக்கும். ஆசியா மற்றும் வட அமெரிக்கா என்றழைக்கப்படும் பகுதிகளில், 100 மில்லியன் முதல் 66 மில்லியன் (10 கோடி முதல் 6.6 கோடி) ஆண்டுகளுக்கு முன், இறக்கைகள் கொண்ட இந்த டைனோசர்கள் இருந்தன.

விக்கலை நிறுத்த

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை அதிகப்படியான காற்றை விழுங்குவதால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுத்தப் பின்னர் குழந்தைகள் ஏப்பம் விட்டால், அவர்கள் விழுங்கிய காற்றானது வயிற்றில் இருந்து வெளியேறிவிடும். இந்த செயல் விக்கல் ஏற்படாமல் தடுக்கும். விக்கல் எடுக்கும் போது முதுகுப் பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுத்தால் விக்கல் நின்றுவிடும்.

அதிசய பாறை

மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கிருஷ்ணனின் வெண்ணைப் பந்து போன்ற பாறை தகுந்த பிடிப்பு ஏதும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அப்படியே இருக்கிறது. 1200 ஆண்டுகளுக்கு முன்னரே உருவானதாக அறியப்படும் இது இயற்கையாக வந்ததா அல்லது உருவாக்கப்பட்டதா என்பது மர்மமாகவே உள்ளது.

வெள்ளை பறவை

விமானங்களில், வெள்ளை நிறம் பெரும்பாலும் பயன்படுத்த காரணம் வெள்ளை நிறம் ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து அதிகமாக வெப்பம் உள்வாங்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் விமானம் அதிகமாக சூடாகாது. விபத்து ஏற்படாது. பறக்கும் போதும், நிலத்திலும் இயல்பாக, எளிதாக பார்க்கக்கூடிய நிலை வெள்ளை நிறத்திற்கு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago