ட்ராவிஸ் எனும் மொழிமாற்றிச் சாதனம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறிய வடிவில் இருக்கும் இந்த சாதனம் நிகழ்நேர முறையில் மொழிமாற்றம் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 80 வகையான மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. நம் மொழியில் சொல்லும் வார்த்தையை பிற மொழிகளில் அழகாக மாற்றம் செய்து கொடுக்கும் திறன் உடையது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
195 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகளவில் நடைபெறும் மொத்த மரணங்களில் 11 சதவீதம் புகை பிடிக்கும் பழக்கத்தால் ஏற்படுகிறதாம். இதன் காரணமாக உயிரிழப்போர் நாடுகள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தையும், அமெரிக்கா, ரஷ்யா 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளன.
ரஷ்ய மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கு பேர், பூனை வளர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பூனைகள் வைத்திருப்பவர்கள் தனியாகப் பதிவு செய்திருக்க வேண்டும், பூனைகளுக்கு என்று தனி பாஸ்போர்ட் இருக்கிறது. எஜமானர்களுடன் வெளியே செல்லும்போது உரிய ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன. பூனை வளர்ப்பை அதிகரிக்க ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் சர்வதேசப் பூனைக் கண்காட்சி நடைப்பெற்றது. இதில் ரஷ்ய பூனை ஒன்று ரூ.15 லட்சத்து 31 ஆயிரத்துக்கு விற்பனையானது. நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சியில், ரஷ்யா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து உயர் ரக பூனைகள் இடம்பெற்றன.
உடலில் கருப்பு வெள்ளை கோடுகளை கொண்டுள்ளதால் இதை வரிக்குதிரை என்கிறார்கள். இவை சுமார் 30 ஆண்டுகள் உயிர் வாழும் பாலூட்டிகள். மனிதர்களுக்கு கை ரேகை போல இவற்றுக்கு வரிக்கோடுகள் ஒவ்வொரு குதிரைக்கும் மாறுபட்டே காணப்படும். இவை நின்றபடியே உறங்கக் கூடியவை. ஒரு வரிக்குதிரையின் கழுத்தின் மீது, மற்றொன்று தன்னுடைய கழுத்தை சாய்த்தபடி நின்று தூங்கும். சுமார் 2 மீ உயரம், 3 மீட்டர் நீளம், 250 முதல் 500 கிலோ எடையுடையதாக இவை காணப்படும். மணிக்கு 55 கிமீ வேகத்தில் ஓடும். நாள் ஒன்றுக்கு சுமார் 80 கிமீ வரை நடக்கும். இவை கூட்டமாகத்தான் வாழும். இவற்றை தனியே பார்க்க இயலாது. இதன் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்னவென்றால் வரிக்குதிரையை பழக்க முடியாது என்பதுதான். அதற்கான பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக விலங்கியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். இது மிகவும் ஆச்சரியமானது தானே...
சுவிஸ் நாட்டில் கினியா பிக் விலங்கை தனியாக வீட்டில் வைத்து செல்லப்பிராணியாக வளர்ப்பது சட்டவிரோதமாகும் ஏனெனில் அவை கூட்டமாக வாழும் விலங்குகள் இனத்தை சேர்ந்தவையாகும் எனவே கினியா பிக் விலங்கை ஒற்றையாக தனியாக வீட்டில் வைத்து வளர்க்க அந்த நாடு தடை விதித்துள்ளது ஆகவே அவற்றை கூட்டமாக வளர்க்கலாமே ஒளிய ஒற்றையாக தனித்து வைத்து வளர்க்கக்கூடாது என்று அந்த நாடு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் வியாழன் கிரகத்தை ஆராய அனுப்பிய விண்கலம் தான் ஜூனோ. இந்த ஜூலையில் ஏறத்தாழ ஐந்து ஆண்டு பயணத்திற்குப் பிறகு தன் பயண இலக்கை அடைந்திருக்கிறது. ஜூனோ குறித்து சில தகவல்கள், ஆகஸ்ட் 5, 2011 அன்று ஜூனோ விண்ணில் செலுத்தப்பட்டது. அக்டோபர் 9, 2013 புவிவட்டப் பாதையிலிருந்து விலகி பயணிக்கத் தொடங்கியது. வியாழன் கிரகத்தை இது சென்று அடைந்த நாள் ஜூலை 4, 2016. டென்னிஸ் விளையாடும் மைதானம் அளவு பெரிதான விண்கலம்தான் ஜூனோ. யானையின் எடையில் பாதி. அதாவது, 3.6 டன்கள். 9 மீட்டர் நீளம் கொண்ட மூன்று சோலார் பேனல்களைக் கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


