உலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது.மேலும் மனிதர்கள், மரங்கள் விகிதமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற அளவில் உள்ளதாக இந்தக் கணிப்புகள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வெட்டப்படும் மரத்தின் எண்ணிக்கை 1,500 கோடிக்கும் அதிகமாகியுள்ளது. மேலும் ஆண்டொன்றுக்கு 1,92,000 சதுர கீமீ பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகள் வேகமாக அழிக்கப்படுவதால் மனித நாகரீகம் தொடங்கிய போது இருந்த மரங்களின் எண்ணிககையை விட தற்போது பாதியாக குறைந்துள்ளது. இது தொடர்பாக Nature என்ற ஆய்விதழிலும் கட்டுரை வெளியாகியுள்ளது. காடு அழிப்பு வேகம் கடந்த நூறு ஆண்டுகளில் மிக அதிகம். தற்போது இருக்கும் 3.04 ட்ரில்லியன் மரங்களில் வெப்ப மண்டல மற்றும் துணைவெப்ப மண்டலக் காடுகளில் 1.39 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. வடமுனைப் பகுதிகளில் 0.74 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. மிதவெப்பப் பகுதிகளில் 0.61 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. பல இடங்களில் அடர்ந்த காடுகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதும் மரங்கள் காணாமல் போனதற்கு காரணம் என்கிறது ஆய்வு.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
எப்போதாவது நீங்கள் வானத்தை பார்க்கும் போது "மேகங்களுக்கு எவ்வளவு எடை இருக்கும்?" என்று நினைத்து இருக்கிறீர்களா? பார்க்க பஞ்சு பொதி போல் காணப்பட்டாலும் மேகங்கள் எடை கொண்டவையாகும். சராசரியாக ஒரு மேகத்தின் எடை 1.1 மில்லியன் பவுணடுகள் ஆகும். அதாவது ஒரு மேகத்தின் எடை சராசரியாக 100 யானைகளின் எடைக்கு ஈடானதாகும்.
வைட்டமின் பி12 சத்துக் குறைபாடு, தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு காரணம். மேலும், பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது. பரம்பரையின் காரணமாகவும் நரை ஏற்படுவது உண்டு.
நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குஜராத் மாநிலம் கிர் காட்டில் வசித்து வருபவர் மகந்த பரத்தாஸ் தர்சன்தாஸ். இவர் ஒட்டு போட்டதாலேயே நாடு முழுவதும் கவனம் பெற்றார். அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.. கிர் காட்டில் இவர் வசிக்கும் பகுதியில் இவர் மட்டுமே தனித்து வசித்து வருகிறார். இவர் வாக்களிப்பதற்காக கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் வசிக்கும் பகுதியில் ஒரே ஒரு ஓட்டுக்காக மட்டும் வாக்கு சாவடி அமைக்கப்பட்டது. அதன் மூலம் இவர் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். தற்போது 2019 வரை இவர் ஒருவருக்காக மட்டுமே ஆளரவமற்ற கிர் வனப்பகுதியில் வாக்கு சாவடி மையம் அமைக்கப்படடது என்றால் ஆச்சரியம் தானே..
பால் 87 சதவீதம் நிறமற்ற நீரைக் கொண்டிருந்தாலும் வெள்ளை நிறத்தில்தான் காணப்படுகிறது. இது ஏன் தெரியுமா.. பாலில் புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாலில் உள்ள புரதங்களின் முக்கிய வகைகளில் ஒன்று கேசின்கள் ஆகும். அவை கால்சியம் மற்றும் பாஸ்பேட்டுடன் சிறிய கொத்தாக சேர்ந்து மைக்கேல்ஸ் எனப்படும் சிறிய துகள்களை உருவாக்குகின்றன. இந்த சிறிய துகள்களைத ஒளி தாக்கும்போது அது ஒளி விலகல் ஏற்பட்டு அதை சிதறச் செய்கிறது. பால் அனைத்து ஒளி அலைநீளங்களையும் பிரதிபலிக்கிறது. எதையும் உறிஞ்சாது. இதனால் பால் வெள்ளை நிறமாக தோன்றுகிறது. எல்லா பாலும் வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. பீட்டா கரோட்டின் போன்ற கரோட்டினாய்டுகள் காரணமாக பாலில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் காரணமாக சில வேளைகளில் மஞ்சள் நிறத்தையும் பிரதிபலிக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


