முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

யோகா நித்ரா

யாரெல்லாம் தூக்கத்தை தொலைக்கிறார்களோ அவர்களுக்கு யோகா நித்ரா ஆசனம்  உதவும். 20 நிமிடங்கள் இந்த ஆசனத்தை செய்தால் 2 மணி நேரம் அதிகமான தூக்கத்தை பெறலாம்.  ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். சக்தி அதிகரிக்கும்.

தமிழனின் துரதிஷ்டம்

14 வயதிலேயே மின்னஞ்சல் சிஸ்டத்தை உருவாக்கி பிரமிக்க வைத்தவர் அமெரிக்காவாழ் தமிழர் சிவா அய்யாதுரை. இவருக்கு ஆகஸ்ட் 30,1982-ல் அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சலை கண்டுப்பிடித்தவர் என காப்புரிமை அளித்தும் மாடர்ன் வரலாற்றில் இவர் பெயர் இடம் பெறாமல் போனது வேதனைக்குரியது.

சென்னை மாநகராட்சி எப்போது தொடங்கப்பட்டது

சென்னைக்கென ஒரு நகர நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி 1687 செப்டம்பர் 28 ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்த அதிகாரிகளுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் ஜோசையா சைல்ட். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜோசையா சைல்டும் துணை ஆளுநர் ஒருவரும் இங்கிலாந்து சென்று மன்னர் இரண்டாம் ஜேம்சைச் சந்தித்து இது குறித்து விவாதித்தனர். முடிவில், அதே ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சென்னையை மாநகராட்சியாக அறிவித்து, அரச பிரகடனத்தை வெளியிட்டார் இரண்டாம் ஜேம்ஸ். அதை தொடர்ந்து 1688 செப்டம்பர் 29ஆம் தேதி மன்னரின் ஆணை அமலுக்கு வந்தது. ஒரு மேயர், ஆல்டர்மென் எனப்படும் 12 கவுன்சிலர்கள், பர்ஜெஸ் எனப்படும் பிரதிநிதிகள் (60 முதல் 100 பேர்வரை) ஆகியோருடன் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. ஆல்டர்மென் எனப்படும் கவுன்சிலர்கள் பிரிட்டிஷ், பிரெஞ்ச், இந்திய வர்த்தக சமூகத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டு மேயரால் நியமிக்கப்பட்டனர். நத்தேனியல் ஹிக்கின்சன் சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார்.

பார்சுவ கோணாசனம்

பார்சுவ கோணாசனத்தை தொடர்ந்து செய்தால் இடுப்பு சதை பகுதி குறையும். ஜீரண மண்டலம் நன்கு தூண்டப்பட்டு, கழிவுகள் முறையாக வெளியேற்றப்படும். மேலும் சுவாச மண்டலம் நன்கு வேலை செய்யும்.

சூரியன் மறையாத அதிசய தீவு எங்குள்ளது தெரியுமா?

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் உள்ள சொம்மாரோயி என்ற தீவு காலம் மற்றும் நேர அடிப்படையில் உலகின் மற்ற பகுதியில் முற்றிலும் மாறுபட்டதாகும். ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இந்த தீவில் நவம்பரில் இருந்து ஜனவரி வரை இருட்டாகவே இருக்கும். அதே போல் ஆண்டில் சில மாதங்கள் இதற்கு நேர் எதிரானதாக இருக்கும். அதன்படி தற்போது அந்த தீவில் சூரியன் மறையாத காலம். அங்கு மே மாதம் 18- ஆம்தேதி நள்ளிரவு முதல் சூரியன் மறையாத காலகட்டம் தொடங்கும். ஜூலை 26- ஆம் தேதி வரை 69 நாட்களுக்கு இப்படித் தான் இருக்கும். இதனால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை நிறையவே மாறியிருக்கிறது.

நல்ல தோற்றத்திற்கு ...

உடல் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம் இல்லாவிடில் உடல் நலக்குறைவு ஏற்படும். இந்த நிலையில் வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவீடனில், 25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 7.5 மணி நேரம் அயர்ந்து தூங்கும்படி வலியுறுத்தினர். அதன் பின்னர் முக அழகை போட்டோ எடுத்தனர். அதே போன்று 4 மணி நேரம் தூங்க வைத்து போட்டோ எடுக்கப்பட்டது. அவற்றில் குறைந்த நேரம் தூங்கிய போட்டோவில் முகம் பொலிவிழந்து கவர்ச்சி இன்றி காணப்பட்டது. இதன் மூலம் முகம் கவர்ச்சியுடன் திகழ அதிக நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago