முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நவீன தொட்டில்

குழந்தைகள் வீட்டில் தூங்குவதை விட, கார் பயணங்களில் இயல்பாகவே உறங்கிவிடும். இந்த வழக்கத்தை வைத்து குழந்தைகளுக்கென நவீன படுக்கை ஒன்றை கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு உருவாக்கியுள்ளது. வீட்டில் எந்தவித தொந்தரவுமின்றி குழந்தைகள் உறங்க இது உதவுகிறது. மேக்ஸ் மேட்டார் ட்ரீம்ஸ் க்ரிப் என்ற பெயரில் அந்நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான இந்தத் தொட்டிலில் பல தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன. தெருவிளக்குகள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் எல்.இ.டி விளக்குகள், காரின் ஒலியை மிமிக் செய்யக்கூடிய அமைப்புகள் இந்த நவீனத் தொட்டிலில் உள்ளன. குழந்தை எதுபோன்ற பயணத்தில் உறக்கத்தை எட்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீட்டு வைத்தியம்

கடுக்காய், மாசிக்காய், சுக்கு, பூண்டு போன்றவை பல் வலி, ஈறுவீக்கம் பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. கடுக்காய் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. துவர்ப்பு சுவை நிறைந்த இது பற்களில் ஏற்படும் பிரச்னையை குணப்படுத்துகிறது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை உடையது. சுக்கு பற்களில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்கிறது. மாசிக்காய் பொடி மிகுந்த துவர்ப்பு சுவை உடையது. பல் வலியை சரிசெய்ய கூடியது. பூண்டு, இந்துப்பு ஆகியவையும் பல் நோய்களுக்கு மருந்தாகிறது.

176 ஏக்கரில் அலுவலகம்

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் கனவு திட்டமான ஸ்பேஸ்ஷிப் கேம்பஸ் 2, கலிஃபோர்னியாவில் சுமார் 2.8 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளது. இதன் ஒட்டு மொத்த கட்டுமான செலவு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இங்கு 176 ஏக்கர் பரப்பளவில் கண்ணாடிகளால் ஆன பெரிய சுவர்கள் கட்டமைக்கப் பட்டுள்ளன. பெரிய அலுவலகங்களில் ஒன்றாகவும் கருதப்படும் இந்த வளாகத்தில் 14,200 ஊழியர்கள் பணிபுரிய முடியும். இதன் தூரம் மட்டும் ஒரு மைலுக்கும் அதிகமாம். இந்த வளாகத்தின் முதன்மை கட்டிடத்தின் உள்கட்டமைப்புகளுக்கு மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. 300,000 சதுர அடியில் இரு பெரிய கட்டிடங்கள் இந்த வளாகத்தினுள் ஆய்வு மற்றும் தயாரிப்பு பணிகளுக்காக கட்டமைக்கப்படுகிறது. 

அதிசய மனிதர்

சுவிட்சர்லாந்தின் ஷூரிச் நகரை சேர்ந்தவர் டிம்ஸ்டெய்னர், இவர் பலவிதமான பச்சை குத்திக் கொண்ட தனது முதுகு தோலை 2008-ம் ஆண்டில் ஜெர்மனி கண்காட்சி அமைப்பாளர் ஒருவரிடம் விற்பனை செய்து விட்டார். தற்போது கண்காட்சிகளில் தன்னை காட்சி பொருளாக்கி வரும் அவர், மறைவுக்கு பின்னும் அவருடைய தோல் நிரந்தரமான காட்சி பொருளாக உள்ளதாம்.

ஒன்பது வகை விஷம்

நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி ஒன்பது விஷங்களை சேர்த்துக் கட்டுவது தான் நவபாஷாணம் ஆகும். பாஷாணங்களில் மொத்தம் 64. இதில் நீலி எனும் பாஷாணம் மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க வைக்கக் கூடியதாம்.

சின்ட்ரோம் கே என்ற உயிர் காக்கும் நோய் குறித்து உங்களுக்கு தெரியுமா?

தற்போது கோவிட் - 19 என்ற வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக உருப்பெற்றுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கானோர் இதற்கு பலியாயினர். உயிரை காப்பாற்றிய சின்ட்ரோம் கே நோய் குறித்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இரண்டாம் உலக போரின் போது நாஸி படையினர் யூதர்களை கொத்து கொத்தாக குறிவைத்து கொலை செய்தனர். அதனால் அவர்களை காப்பாற்றுவதற்காக சின்ட்ரோம் கே என்ற போலியான நோய் ஒன்று இருப்பதாக இத்தாலி டாக்டர்கள் பரப்பினர். இதன் மூலம் மருத்துவமனைக்கு வந்த யூதர்களை அவர்கள் நாஸிக்களிடமிருந்து காப்பாற்றினர். இதனால் யூதர்களை அங்கு தனிமைப்படுத்தி டாக்டர்கள் பாதுகாத்தனர். அவர்களை தொடர்பு கொண்டால் அந்த கொடிய நோயால் நாமும் மரணித்து விடுவோம் என உண்மையாகவே நாஸிக்கள் அஞ்சி யூதர்களை நெருங்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago