முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பச்சையாக சாப்பிடவும்

விட்டமின் C, B6, ஃபோலிக் அமிலம், கால்சியம் சத்துக்களை உள்ளடக்கிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் செரிமானம், மலச்சிக்கல், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் கொழுப்புகள் இல்லாததால்,  ரத்த நாளங்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.

மிகவும் பெரியது

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசாக கருதப்படும், உலகின் மிக ப்பெரிய விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப்-ஐ, 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரஞ்சு கயானாவிலிருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் விண்வெளியில் செலுத்த நாசா முடிவு செய்துள்ளது. அகசிவப்பு கதிர்களைக் ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும்.ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் தொலை தூரத்தில் இருக்கும் சிறிய கிரகங்களையும் நட்சத்திரக்கூட்டங்களையும் காணமுடியும்.

குறைந்த விலையில்...

ஆளில்லா தானியங்கி விமானங்களும், வழக்கமாக வானில் இயக்கப்படும் மற்ற விமானங்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் அபாயத்தை தடுக்க சென்ஸ்ஃப்ளே (SenseFly) என்ற நிறுவனத்தின் சார்பில் இதற்கான செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் ஏற்றது

உடற்பயிற்சியில் ஏரோபிக், அனரோபிக் என 2 வகை பயிற்சி முறைகள் உள்ளன. குறைந்த நேரத்தில் அதிகப்படியான ஆற்றலை வெளிப்படுத்தி ஓடும் 100 மீ. ஓட்டப்பந்தயம் ஏரோபிக் பயிற்சியாகவும், அதிக நேரத்தில் மிதமாக ஓடக்கூடிய 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் அனரோபிக் பயிற்சியாகும். அனரோபிக்  அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

நோய் எதிர்ப்பு மருந்து

நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை குணப்படுத்த நேரடி மருந்து மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபயாடிக்) மருந்துகளையும் வழங்குவது வழக்கம். இது கிருமிகள், பாக்டீரியாக்களை கொன்று நோயை குணப்படுத்தும். வருங்காலத்தை கருத்தில் கொண்டு விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே வான்கோமைசின் என்ற நோய் எதிர்ப்பு மருந்து புழக்கத்தில் இருந்தது. அந்த மருந்தால் இப்போது பலன் இல்லை. இதே மருந்தை மேலும் வீரியப்படுத்தும் வகையில் ஆய்வு செய்தனர். அதில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து 1000 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கிறது. எனவே கிருமிகளால் உருவாகும் அனைத்து நோய்களையும் இது கட்டுப்படுத்துமாம்.

சீறிப்பாயும் சிறுத்தை

ஒரு விநாடிக்கு 10 மீட்டர், ஒரு மணி நேரத்திற்கு 113 கிலோமீட்டர் என வேகமாக ஓடும் திறன் கொண்டது சிறுத்தை. இந்த வேகத்திற்கு காரணம் அதன் உடலமைப்பு, வால் பகுதி, இதயம், பெரிய நுரையீரல் ஆகியவையாம். மேலும், அதன் வளையும் தன்மை கொண்ட முதுகுத் தண்டும், தட்டையான விலா எலும்பும். இவை இரண்டும் கால்களை வேகமாக இயக்க செய்ய உதவுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago