முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பிறந்த குழந்தைகள் கண்ணீர் விடுவதில்லை

பிறந்த குழந்தைள் வீறிட்டு அழுவதை நாம் கேட்டிருப்போம். பசியின் போதும், தாயின் துணை தேடியும் பிறந்த குழந்தைகள் அழுவது வழக்கம். ஆனால் நமக்கு இதுவரை தெரியாத ஒன்று என்ன தெரியுமா.. அவ்வாறு அழுதாலும் அவர்களுக்கு கண்ணீர் வருவதில்லை என்பதுதான். ஏன் தெரியுமா.. பிறந்த குழந்தையின் கண்களில் கண்ணீர் சுரப்பிகள் இருக்காது. கண்ணீர் சுரப்பிகள் 4 முதல் 12 வாரங்களுக்கு பிறகே வளரத் தொடங்கும். பிறகென்ன அதற்கு பிறகு கண்ணீர் மழைதான்.

கேரளாவுக்கு பெருமை

கூகுள் நிறுவனம், தனது ஆண்ட்ராய்டு இயங்கு தள ங்களுக்கு பிரபலமான உணவு வகை களின் பெயரைச் சூட்டுவது வாடிக்கை. மார்ஷ் மெல்லோவுக்குப் பின்னர் அடுத்த வெர்ஷனுக்கு கேரளாவின் பாரம்பரிய உணவு வகையான நெய்யப்பத்தின் பெயரைச் சூட்டணும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாம்.

நீரின் அவசியம்

நீரை வீணாக்காமல் சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நாம், ஒவ்வொருவரும் கை கழுவுவதற்காக 330 மில்லி தண்ணீரை வீணாக்குகிறோம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சோப்பை பயன்படுத்தும் முன் நமது கைகளை ஈரப்படுத்த 5மி தண்ணீரே போதுமானது. ஆனால், நாம் கைகளை கழுவ 330 மி தண்ணீரை வீணடிக்கிறோம்.

தமிழ் இடம் பெற்ற நாணயம் எப்போது வெளியானது தெரியுமா?

இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி ரூபாய் நோட்டுகளில் தமிழ் மொழி இடம் பெற்றிருந்தது நமக்கு தெரியும். அதைவிட பெருமை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்த முக்கியமான 8 மொழிகள் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டு வந்தன. அதில் ஹிந்தி இடம்பெறவில்லை. இந்தி மொழியானது இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகே ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டன. 1953 ஆம் ஆண்டுகளுக்கு பிறகே இந்தி மொழியானது பெரும்பாலும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற துவங்கின. இந்நிலையில் முன்னாள் முதல்வர் அண்ணா நூற்றாண்டை போற்றும் வகையில் 2009 இல் சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. நினைவு நாணயங்களில் தலைவர்களின் அதிகாரப்பூர்வ பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் அண்ணாவின் நாணயத்தில் அவரது சிறப்புப் பெயரான ‘பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு’ என்று பொறிக்கப்பட்டிருப்பது வேறு எந்தத் தலைவருக்கும் கிடைக்காத சிறப்பு. அதேபோல், அண்ணாவின் கையெழுத்தைத் தாங்கியிருக்கும் இந்த நாணயம், தமிழ் மொழி இடம்பெற்றிருக்கும் ஒரே நாணயமாகவும் திகழ்கிறது.

அதிகமில்லை ரூ.15 லட்சம்தான்!

ரஷ்ய மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கு பேர், பூனை வளர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பூனைகள் வைத்திருப்பவர்கள் தனியாகப் பதிவு செய்திருக்க வேண்டும், பூனைகளுக்கு என்று தனி பாஸ்போர்ட் இருக்கிறது. எஜமானர்களுடன் வெளியே செல்லும்போது உரிய ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன. பூனை வளர்ப்பை அதிகரிக்க ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் சர்வதேசப் பூனைக் கண்காட்சி நடைப்பெற்றது. இதில் ரஷ்ய பூனை ஒன்று ரூ.15 லட்சத்து 31 ஆயிரத்துக்கு விற்பனையானது. நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சியில், ரஷ்யா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து உயர் ரக பூனைகள் இடம்பெற்றன.

நீரில் இயங்கும் கணிணியை உருவாக்கிய ரஷ்யா

டிரான்சிஸ்டர்கள் எனப்படும் சிறிய கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரையிலும் கணிணியானது இயங்குவதற்கு பற்சக்கரங்கள், பிவோட்கள், நெம்புகோல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. இவற்றை இயக்குவற்கு என தனியாக ஆற்றலும் தேவைப்பட்டது. இந்த சூழலில் 1936 இல் விளாடிமிர் லுகியானோவ் என்பவர் நீரை பயன்படுத்தி சில கணித முறைகளுக்கு தீர்வு காணக் கூடிய கணினியை உருவாக்கினார். இவற்றை கட்டிடங்களில் ஏற்படும் விரிசலை கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்டன. பின்னாட்களில் இது வழக்கொழிந்தது. தற்போது இந்த நீர் கணினி மாஸ்கோவில் உள்ள பாலிடெக்னிக் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago