முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செயலிகள் எச்சரிக்கை

ஆண்ட்ராய்டு செயலிகள் உள்ள மொபைல் போன்கள் மூலம் ஒருவரின் இருப்பிடம் மற்றும் பயணிக்கும் இடங்கள் ஆகியவற்றை உளவு பார்க்க முடியும் என அமெரிக்காவின் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். எனவே ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யும் முன் எச்சரிக்கையாக செயல்பட அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நினைப்பது ஒன்று.... நடப்பது ஒன்று...

புற்று நோயை குணப்படுத்தவும், அது மேலும் பரவாமல் தடுக்கவும் பலவிதமான மருந்துகள் உட்கொள்ளப்படுகின்றன. அதனால் உடல் உறுப்புகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அந்த மருந்துகள் இதயத்தின் திசுக்களை வலுப்படுத்தி அவை நல்ல முறையில் செயல்பட புத்துயிர் அளிப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரத்த செல்கள் மற்றும் ரத்த ஓட்டத்தில் தடை உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும். எனவே மாரடைப்பு, இதய நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை ஆய்வு மேற்கொண்ட டெக்காஸ் பல்கலைக்கழகத்தின் தென் மேற்கு மருத்துவ மைய மருந்து பிரிவு பேராசிரியர் லாரன்ஸ்லம் தெரிவித்துள்ளார்.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா?

சார்லஸ் டார்வின் என்பவரை பற்றி தெரியாவர்கள் இருக்க முடியாது. இந்த உலகில் புழு, பூச்சி தொடங்கி மனித இனம் வரை அனைத்தும் எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கு விடை காண முயன்றவர். அவர் உருவாக்கிய தியரியே.. அதாவது கோட்பாடே பரிணாம கொள்கை. இதன் மூலம் ஒரு செல்லிலிருந்து பிரிந்த புதிய உயிரினம் படிப்படியாக பல்கி பெருகி, தாவரங்கள், பூச்சிகள், தவளைகள், மீன்கள், பறவைகள், விலங்குகள், குரங்கின் வழியாக மனித இனம் தோன்றின என்கிறார். ஆனால் இன்றைய நவீன வீஞ்ஞானம் செல்லை மட்டுமின்றி அதனுள் புதைந்திருக்கும் கோடிக்கணக்கான மரபணுக்கள், அவை உருவாக காரணமாக டிஎன்ஏ, ஆர்என்ஏக்கள் என தனது பயணத்தை மிகவும் மைக்ரோ, நேனோ லெவலுக்கு கொண்டு சென்று விட்டது. அதில்தான் முக்கிய திருப்பம் நடந்துள்ளது. கடந்த 2015 இல் கேம்பிரிட்ஜ் பல்கலை நடத்திய ஆய்வில் தாவரங்களில் இருந்து வந்த மரபணுக்கள் வாயிலாக மனித இனம் தோன்றியிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி சுமார் 1 சதவீத மனித மரபணுக்கள் தாவரங்களிலிருந்து பெறப்பட்டவைதான் என அடித்து சொல்கின்றன. என்ன ஆச்சரியம் பாருங்கள்.. இப்போ சொல்லுங்கள் நாம் குரங்கிலிருந்து வந்தோமா, தாவரத்திலிருந்து வந்தோமா...

நீச்சல் குளம்

இத்தாலியில் 42 மீட்டர்‌ ஆழம் கொண்ட நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. வெந்நீர் ஊற்றுக்கு பெயர் போன இத்தாலியின் கொல்லி இகானி பகுதியில் இந்த நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. 10 மீட்டர் மற்றும் 20 மீட்டர் ஆழத்தில் குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீச்சல் குளத்தின் சிறப்பம்சத்தை கேள்விப்பட்ட பல நீச்சல் வீரர்கள் இங்கு நீத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

27 முறை மாரடைப்பு

கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்ட இங்கிலாந்தின் வெட்னஸ்பெரி பகுதியை சேர்ந்த 54 வயதான ராய்வுட்கால்  என்பவர் போட்டி ஒன்றில் விளையாடிய போது முதன் முறையாக இவருக்கு மார்பில் வலி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் இரு முறை மாரடைப்பு ஏற்பட்டது. இதனிடையே இவருக்கு கரோனரி ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் தயாரானபோது குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர். பலமுறை இருதயம் நின்று துடித்துள்ளதால் ஆக்சிஜன் அளவு குறைந்திருக்கும், இதனால் இவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக குறைவு என அவர் அஞ்சியுள்ளனர். அடுத்த நாள் மதியம் ஒரு மணி அளவில் இவருக்கு 27-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவரை மருத்துவமனையில் சேர்த்து 24 மணி நேர இடைவெளியில் இது ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேநீர்தான் உணவு

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தலைவிரித்தாடும் பஞ்சத்தால் உண்ண உணவு கிடைக்காமல், வெறும் க‌றுப்புத் தேநீரை (பிளாக் டி)மட்டுமே பருகி உயிர்வாழ வேண்டிய நிலை அங்குள்ள மக்கள் இருக்கிறார்கள்.  பால் வழங்கிக் கொண்டிருந்த ஆடுகளும், மாடுகளும் வறட்சியால் இறந்துபோய் விட்டதால் இந்த நிலைமைக்கு அங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago