ராஜாக்கள், மந்திரிகள், தளபதிகள் போன்றோர் அணியும் கிரீடம் அல்லது தலை கவசங்களை நாம் திரைப்படங்களிலும், அருங்காட்சியகங்களிலும் நாம் பார்த்திருப்போம். வடமேற்கு ஐரோப்பாவில் 8 முதல் 11 நூற்றாண்டு வரையிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி குடியேறிய வைக்கிங் எனப்படும் ஒருவகை கூட்டத்தினரின் கால கட்டத்தில் உருவானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மைய ஆய்வுகள் இதில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளன. ஐரோப்பாவில் காணப்பட்ட ெகாம்பு வைத்த கிரீடங்கள் அல்லது தலை கவசங்கள் அதற்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையவையாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். பித்தளை கால கட்டம் என வர்ணிக்கப்படும் கிமு 3300 கால கட்டமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. 1942 இல் கோபன்ஹேகனில் இது தொடர்பான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகிலேயே மிகவும் அமைதியான இடம் எங்குள்ளது என்ற தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இயற்கையான இடமோ, நகரோ அல்ல. மாறாக அது ஒர் அலுவலகம். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ரெட்மாண்ட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மைக்ரோஷாப்ட் தலைமையகத்தில் உள்ள பரிசோதனை கூடம்தான் அந்த இடம். இந்த இடத்தில் உள்ள சத்தத்தின் அளவு வெறும் 20 டெசிபலுக்கும் கீழே உள்ள இடம். இதன் மூலம் முந்தைய சாதனைகளை இந்த இடம் முறியடித்துள்ளது
உலகம் முழுவதும் ஏராளமானோரை தாக்கி உயிர் பலி வாங்கும் எய்ட்ஸ் நோய்க்கு முற்றிலும் குணப்படுத்தும் சிகிச்சை முறையை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். மரபணு சிகிச்சை மூலம் எச்.ஐ.வி. கிருமி உடலில் வளரும் போதே அவற்றை அழித்து விடலாம். உயிர் இழப்புகளை தடுத்து விடலாம். விரைவில் இந்த மருத்துவ முறையை மனிதனிடம் சோதனை நடத்தி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளனர்.
ஜப்பானை சேர்ந்தவர் 72 வயதான மூதாட்டி Chiyomi Sawa. இவர் 19 உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்றால் நம்ப முடிகிறதா. நம்பித்தான் ஆகவேண்டும். அதிலும் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து 19 உலக சாதனைகளை நிகழ்த்தி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி தன் வசம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். பளு தூக்குதலில் தான் தொடர்ந்து அவர் இந்த சாதனைகளை நிகழ்த்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலம்பியாவின் லா மக்கரேனாவில் உள்ள கானோ கிறிஸ்டல்ஸ் நதியானது "ஐந்து நிறங்களின் நதி" மற்றும் "திரவ வானவில்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் தெளிவான நீரின் கீழே நீங்கள் காணக்கூடிய பல வண்ணங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. ஆற்றில் உள்ள நீர்வாழ் தாவரங்களின் இனப்பெருக்க செயல்பாட்டின் போது வண்ணங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அவை Macarenia clavigera என்று அழைக்கப்படுகின்றன, இங்கு ஓடும் தூய, தெளிவான நீரால் பொது மக்கள் ஈர்க்கப்பட்டு இப்பகுதியை பார்ப்பதற்காக ஆண்டு தோறும் ஏராளமானோர் வருகின்றனர்.
பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக் கூடிய கார்கள், 2030-இல் பயன்பாட்டில் இல்லாத நிலை உருவாகும். 2030-இல் எரிசக்திப் பற்றாக்குறையாலும் சுற்றுச்சூழல் கருதியும், பெட்ரோல் புழக்கமே அரிதாகிவிடுமாம். 2024-ல் ஒரு பேரல் பெட்ரோல் வெறும் 25 அமெரிக்க டாலராகக் குறையும் என்றும், 2030-க்குள் உலகில் எண்ணெய் தொழில் முடங்கிப் போகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


