ஆள் இல்லாத விமானங்களையும், பைலட் இல்லாத விமானங்களையும் தற்போது நாம் கேள்வி பட்டு வருகிறோம். தற்போது காரிலும் ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி கார்கள் வந்து விட்டன. ஆனால் மிகவும் சிக்கலான செயல்பாடுகளை கொண்ட ஹெலிகாப்டர்களை பைலட் இல்லாமல் ஓட்ட முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்புதான். ஆனால் தற்போது முடியும் என அமெரிக்கா நிரூபித்துள்ளது. பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்களை முழுக்க முழுக்க பைலட்டே இல்லாமல் ஆட்டானமஸ் முறையில் இயங்கும் வரையில் வடிவமைத்துள்ளது அமெரிக்க ராணுவம். இதற்கான முதல் சோதனை ஓட்டம் கடந்த 5 ஆம் தேதியும் பின்னர் கடந்த 7 தேதியும் நிகழ்த்தி பார்க்கப்பட்டன. இதில் இந்த பைலட் இல்லா ஹெலிகாப்டர் மிகச் சரியாக மேலெழுந்து சென்று பறந்து. மிகச் சரியாக தரையில் வந்து லேண்ட் ஆனது. இனி வருங்காலத்தில் ஆட்டோ பைலட் கார்களை போல ஆட்டோ பைலட் ஹெலிகாப்டர்களும் வானில் வலம் வருவதை பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.
வாட்டர் ஃபுரூப் ஸ்பீக்கரான லாஜிடெக் வொண்டர் பூம் எனும் ப்ளூடூத் ஸ்பீக்கர் மழையில் நனைந்த படியும், நீச்சல் குளத்திலும் பயன்படுத்த முடியும். மேலும் 360 டிகிரி சரவுண்ட்டுக்கு ஒலியை கொடுக்கும். இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரத்திற்கு கேட்கலாம். 5 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும், எந்தவித சேதமும் ஏற்படாதாம். ஒரே நேரத்தில் இரண்டு ஆடியோ டிவைஸ்களில் கனெக்ட் செய்ய முடியும்
மிச்சிகன் மாநில ஆய்வாளர்கள் கோப்பிரவைடு மெட்டலிடிரன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படும். கோல்டு குளோரைடு எனும் ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டறிந்துள்ளனர்.
கடல் வாழ் உயிரினங்களிலேயே மனிதர்களுடன் மிகவும் நட்பாகவும், உறங்கும் போது ஒரு கண்ணை மூடி, ஒரு கண்ணை திறந்து வைத்து கொண்டிருக்கும் அந்த விலங்கினம்... நிச்சயமாக அது டால்பின்கள்தான் என்பது சொல்லாமலேயே தெரிந்திருக்கும்...எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ளவும், மூளையின் ஆற்றலை பாதுகாக்கவும் டால்பின்கள் இவ்வாறு ஒரு கண்ணை திறந்து வைத்துக் கொண்டு உறங்குவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இதன் மூலம் அரைத் தூக்கம், அரை விழிப்பு என்ற நிலையில் எப்போது டால்பின்கள் உஷராக இருக்கின்றன... என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.
ஒவ்வொருவருக்கும் வாழ்வில் திருப்புமுனை எப்படி வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் பிளம்பர் வேலை செய்து வரும் Justin Cauley என்பவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இவர் அண்மையில் அங்குள்ள சர்ச் ஒன்றில் பாத்ரூமில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சுவரை தோண்டும் போது சுண்ணாம்பு காரை கொட்டுவதற்கு பதிலாக பணம் கொட்டியது. அத்தனையும் அசல் டாலர்கள். உடனே சுவரை உடைத்து பார்த்தில் இந்திய மதிப்பில் ரூ.4.5 கோடி பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் நேர்மையாக சிந்தித்த அவர் அந்த பணத்தை தான் எடுத்துக் கொள்ள விரும்பாமல் போலீஸில் ஒப்படைத்தார். விசாரணையில் அங்கு 2014 இல் நடந்த கொள்ளை சம்பவத்தின் போது அடிக்கப்பட்ட பணம் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை கண்டுபிடித்த பிளம்பருக்கு ரூ.3 லட்சம் சன்மானம் அளித்து பாராட்டப்பட்டார். இந்த செய்தி பரவி பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில், மேலும் ஒரு ஜாக்பாட்டாக சர்ச் நிர்வாகம் அவருக்கு ரூ.15 லட்சம் பரிசளித்து அசத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


