உலகிலேயே அதிக வயது கொண்ட மூதாட்டி வாழ்ந்த நாடு பிரான்ஸ்தான். ஜெனே லூயி கால்மென்ட் என்ற மூதாட்டி 1872 ஆம் ஆண்டு பிறந்தார். தனது 122 வயது வரை வாழ்ந்தார். 1997 இ்ல் மறைந்தார். அதிகாரப்பூர்வமாக அதிக வயது வரை வாழ்ந்தவர் என்ற ஆவணப்படுத்தப்பட்டது இவரது வாழ்வாகும். மேலும் பிரான்சில் மக்களின் சராசரி ஆயுள் காலம் மற்ற நாடுகளை காட்டிலும் அதிகம்். 2018 நிலவரப்படி சராசரி ஆயுள் பெண்களுக்கு 85.3 ஆண்டுகள், ஆண்களுக்கு 79.4 ஆண்டுகள். அதிக ஆயுள் கொண்ட மனிதர்கள் பட்டியலில் பிரான்ஸ் உலகில் 14 ஆவது இடத்தில் உள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
பேஸ்புக் போலவே ஒரு பிரபலமான சமூக ஊடகம் ட்விட்டர். இது 2006 ஆம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி நிறுவப்பட்டது. ட்விட்டர் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் கணக்குப்படி 310 மில்லியன் பயனாளர்களை ட்விட்டர் கொண்டுள்ளது.ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவை லாரி (Larry) எனும் பறவையாகும். ட்விட்டர் பயன்படுத்தும் நபர்களில் 1.2 லட்சம் பேர் 123456 என்பதை தான் பாஸ்வேர்டாக வைத்துள்ளனர். ஒரு நாள் ட்விட்டரில் பதிவு செய்யப்படும் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டால் 10 மில்லியன் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட வேண்டியிருக்குமாம். ட்விட்டரில் அக்கவுன்ட் வைத்திருக்கும் 44% பேர் இதுவரை ஒரு ட்வீட் கூட செய்ததில்லை. இன்டர்நெட் பயன்படுத்தும் 90 சதவிகிதம் பேர் ட்விட்டரை பயன்படுத்துவது இல்லை
உலகின் பேட்டரி இல்லா முதல் செல்போனை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். சுற்றுப்புறத்தில் உள்ள ரேடியோ சிக்னல்கள் மற்றும் ஒளி ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெற்று இயங்கும் வகையிலான புதிய செல்போன் ஒன்றை வடிவமைத்து ஆய்வாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். அந்த செல்போனைப் பயன்படுத்தி ஸ்கைப் மூலம் வீடியோ கால் பேசி நிரூபித்துள்ளனர். ரேடியோ அலைகளில் இருந்து ஆற்றலைப் பெறும் வகையில் செல்போன்களில் சிறிய அளவிலான ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த அலைகளைப் பயன்படுத்தி குரல் பதிவுகளை பரிமாறிக் கொள்ளும் வகையில் செல்போனின் செயல்பாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
சைபீரியாவிலுள்ள அல்டாஸ் மலைப்பகுதி, உலகிலேயே வெப்பநிலை குறைந்த பகுதிகளில் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில் இருப்பதால், இங்கு வெப்பநிலை மைனஸ் 50 டிகிரிக்கும் குறைவானதாகவே இருக்கும்.இந்தப் பகுதியில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் 4 ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்காக, அங்கு டாய்லெட் ஒன்று உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 8530 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த டாய்லட் உலகின் மிக அபாயகரமான டாய்லெட். டாய்லெட் உபயோகத்திற்கான டிஷ்யூ பேப்பர்கள் ஹெலிகாப்டர் மூலமாகவே கொண்டு வரப்படுகிறது.
4660 என்ற இலக்கத்தைக் கொண்ட நிரெஸ் விண்கல் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு பூமிக்கு அருகே சுமார் 3.9 மில்லியன் கிலோ மீட்டர் அருகே வந்தது. சூரியனைச் சுற்றி வரும் இந்த விண்கல், 2060 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதைவிட இன்னும் அருகே, 1.2 மில்லியன் கிலோ மீட்டர் அருகே வரவிருக்கின்றது. சூரியக்குடும்பத்தில் சூரியனைச் சுற்றிவரும், இந்த விண்கல்லால் உடனடிப் பாதிப்பு இல்லாவிட்டாலும், பூமிக்கு ஆபத்தான விண்கற்களின் பட்டியலில் இதுவும் இடம் பெற்றிருக்கின்றது.
ஒரு வடிகட்டும் காகிதத்தில் சில துளிகள் பெட்ரோலை ஊற்றினால், சிறிது நேரத்தில் முழுதும் ஆவியானால் குட். இல்லையென்றால் கலப்படம். தெர்மாமீட்டரை பெட்ரோலில் வைத்து பார்த்தால், வெப்பநிலை குறைவாக காண்பித்தால், மண்ணெண்ணை கலப்பட பெட்ரோல். காப்பர் வலையில் பெட்ரோலை ஊற்றி எரிக்கும் போது கரிய புகை வந்தால் கலப்படம். என்ன ஓகேவா..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


