Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மெட்ரிக் முறையிலான கணக்கீடுகளை பயன்படுத்தாத நாடு எது தெரியுமா&?

இன்றைய நவீன உலகத்தில் நீட்டல், முகத்தல், நிறை என அனைத்தும் நவீன கணிதத்தின் மெட்ரிக் முறையிலேயே பயன்படுத்தப்படுகின்றன. நீர் பொருள்களை அளக்க லிட்டர், மில்லி லிட்டர் இப்படி, நீளத்தை அல்லது தூரத்தை அளக்க மில்லி மீட்டர், செமீ, மீட்டர் இப்படி, எடையை அளக்க கிராம், மில்லி கிராம், கிலோ கிராம்... இப்படி. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் உள்ள சுமார் 200 நாடுகள் இந்த முறைகளையே அளவீடுகளுக்கு பயன்படுத்துகின்றன. ஆனால் இதை பயன்படுத்தாத நாடுகளும் உலகில் உள்ளது என்றால் ஆச்சரியமானது தானே.. அவை மியான்மர், லைபீரியா மற்றும் அமெரிக்கா.  அண்மையில் லைபீரியாவும், மியான்மரும் மெட்ரிக் அளவீடுகளை ஏற்பதாக அறிவித்தன. ஆனால் அமெரிக்கா மட்டும் விதி விலக்கு. அவை யார்டு, அவுன்சு, பவுண்டு என்று பழைய கணக்கை கொண்டுள்ளது என்றால் ஆச்சரியமானு தானே..

கன்ன சுருக்கங்களை வைத்து பொய் சொல்வதை கண்டு பிடிக்கும் கருவி

போலீஸாரின் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையை கூறவில்லை என்றால் லை டிடெக்டர் என்ற கருவி மூலம் மருத்துவ ரீதியாக உண்மையை வரவழைக்க முயற்சிப்பர். பெரும்பாலான நாடுகளில் இந்த முறைக்கு அனுமதி கிடையாது. இது அந்த நபரின் அனுமதியின்றி மருந்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதால் பலத்த எதிர்ப்புகள் உள்ளன. தற்போது இதற்கு முடிவு கட்டும் வகையில் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலை கழக பேராசிரியர் டினோ லெவி என்பவர் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார். இது பொய் சொல்பவரின் கன்னங்களில் ஏற்படும் சுருக்கம் மற்றும் அதிர்வுகளை கணக்கிட்டு, அவர் பொய் சொல்கிறார் என்பதை காட்டிக் கொடுத்து விடும். இந்த தசை சுருக்கங்களை முன்பு எந்த சென்சராலும் கண்டறிய முடியவில்லை, ஆனால்,ஒரு இஸ்ரேல் நிறுவனத்துக்கு தனது புதுமையான எக்ஸ்ரோடு கருவியை விற்ற பேரா.யேல் ஹனைன் என்பவரின் கருவி இதை மிகச் சரியாக கணித்துள்ளது. சுமார் 75 சதவீத வெற்றியை இது அளித்துள்ளதாக அந்த குழுவினர் கூறுகின்றனர். இதற்காக முகத்தில் ஒட்டப்படும் சிறிய ஸ்டிக்கர்களில் இருக்கும் எக்ஸ்ரோடுகள் இவற்றை கணித்து சொல்லிவிடும் திறன் படைத்தவையாக உள்ளன. இனி வழக்கு விசாரணைகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என நம்பலாம்.

நீண்ட சேவை

சீனா, தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு நேரடி சரக்கு ரயிலை அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் உள்ள யுவூ நகரிலிருந்து லண்டன் மாநகருக்கு இந்த சரக்கு ரயில் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.இதன்மூலம், கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய பல தேசங்களை கடந்து லண்டன் மாநகரை அந்த ரயில் அடையும். யுவூ மற்றும் லண்டன் நகரங்களுக்கு இடையிலான கிட்டத்தட்ட 12,000 கிமீ தூரத்தை 18 நாட்களில் கடக்க இருக்கிறது இந்த சரக்கு ரயில்.

பரத்வாஜாசனம்

உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முகுது வலியை கட்டுப்படுத்தும் எளிய ஆசனம்தான் பரத்வாஜாசனம்.  இந்த ஆசனம் செய்வதால், முதுகெலும்பை சீராக வளையும் படி செய்கிறது. முதுகெலும்புக்கு வலிமையூட்டப்படுகிறது. முதுகு வலியை கட்டுப்படுத்தி, முதுகெலும்பின் ஆர்த்தரைடீஸை கட்டுப்படுத்துகிறது இந்த ஆசனம்.

சிறு குச்சியே படகு...

அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவை தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன. இது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா? ஆச்சரியம் உண்டு! அப்பறவை, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைகளோ கிடையாது! கடலின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுக்கும்? அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன. ஒரு சிறிய பறவைக்கு  16,600 கி.மீ., பறப்பதற்கு ஒரு சிறுகுச்சி ஆதாரமாக இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே..

இந்தியர்களின் உலகம்

உலக அளவில் ஆண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்தும் 10 மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. கடந்த மே மாதம் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஏதாவது ஒரு செயலியை பயன்படுத்துவதில் நேரத்தைச் செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ஷாப்பிங் ஆப்ஸ், டிராவல் ஆப்ஸ், கேம்ஸ் ஆப்ஸ் ஆகியவற்றையே இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுகின்றனராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago