திருப்பதியில் தர்ம தரிசனம் தொடங்கி பல்வேறு தரிசன கட்டணங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகிலேயே அதிக வருவாய் கொண்ட கோயிலாகவும், அதிக பக்தர்கள் தரிசனம் செய்யும் கோயிலாகவும் திருப்பதி விளங்கி வருகிறது. அண்மையில் திருப்பதி தேவஸ்தானம் புதிய கட்டண அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி நாள் முழுவதும் உதய-அஸ்தமன சேவையை தரிசனம் செய்ய ரூ.1.50 கோடி கட்டணம். அதாவது வெள்ளிக்கிழமைகளில் இந்த கட்டணமும், மற்ற நாட்களுக்கு ரூ.1 கோடியும் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் நாள் முழுவதும் உதய சேவை தோடங்கி அஸ்தமன சேவை மற்றும் இரவு கோயில் நடை சாத்தும் வரையில் அனைத்து வழிபாடுகளையும் பக்தர்கள் தரிசிக்க இந்த கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் அபிஷேகம் நடைபெறும் என்பதால் ரூ.1.50 கோடி. இந்த வசதியை பக்தர்கள் 25 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது ஒருமுறை கட்டணம் செலுத்தி விட்டு ஏதேனும் ஒரு நாளை தேர்வு செய்து கொண்டால், 25 ஆண்டுகளுக்கும் அந்த நாளின் முழு சேவை வழிபாட்டையும் பக்தர்கள் தரிசிக்கலாம் என்பது கோயில் நிர்வாகத்தின் ஏற்பாடு. இதற்காக முதல் கட்டமாக ஆன் லைனில் 531 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், சென்னை முதலிய பல இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
இன்றைக்கு உலகிலயே அதிக விலையுள்ள ஆபரணம் எது என்று கேட்டால் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு சொல்வார்கள்.. அது வைரம்தான். அது சரி இந்த வைரம் எங்கிருந்து எப்போது முதன் முதலாக வெட்டி எடுக்கப்பட்டது தெரியுமா.. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தான் வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. தொடக்கத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள குண்டூர் டெல்டா பகுதிகளில்தான் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு வெட்டி எடுக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் பிரேசிலில் வைரம் இருப்பது கண்டுபிடிக்கப்படும் வரை உலகின் வைர சந்தையில் இந்தியாதான் நம்பர் ஒன். இந்தியாவிலிருந்து அந்நிய படையெடுப்புகளால் கொள்ளை போன் முக்கிய தொல் பொருள்களில் விலையுயர்ந்த வைரங்களும் அடக்கம். இது மிகவும் ஆச்சரியமான ஒன்று தானே
குஞ்சு பொரிப்பதற்கு முன்னால் பறவைகள் கூடுகட்டுகின்றன. அதே போல குட்டி போடுவதற்கு முன்பாக விலங்குகள் ஏதேனும் கூடு அல்லது வீடு கட்டுகின்றனவா.. என்று கேட்டால், ஆம் என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பாலூட்டிகளில் ஒரு விலங்கினம் அவ்வாறு வீடு கட்டுகிறது. குச்சிகள், இலைகள், வைக்கோல்கள், பசுந்தழைகள் ஆகியவற்றை கொண்டு வந்து பஞ்சு பொதி போன்ற வீட்டையும், குட்டிகளுக்கு மெத்தென்ற படுக்கையையும் அந்த விலங்கு தயார் செய்கிறது. அது சினையாக இருக்கும் 3 மாத, 3 வார, 3 நாள் கால கட்டத்தில் அது இவ்வாறான கூடு கட்டும் பணிகளில் ஈடுபடுகிறது. நாம் அந்த விலங்கை தினமும் பார்த்து வந்தாலும் நம் அனைவருக்கும் தெரியாத ரகசியமாக இந்த நடவடிக்கை இருப்பதை அறிந்தால் அது ஆச்சரியம் தானே. அந்த விலங்கு வேறு எதுவும் இல்லை. நாம் அன்றாடம் பார்க்கும் சேற்றில் திளைக்கும் பன்றிதான் அது.
நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி ஒன்பது விஷங்களை சேர்த்துக் கட்டுவது தான் நவபாஷாணம் ஆகும். பாஷாணங்களில் மொத்தம் 64. இதில் நீலி எனும் பாஷாணம் மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க வைக்கக் கூடியதாம்.
மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு இங்கிலாந்து அதிகாரி ஆவர். இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்சும் படைத்தலைவர் இராபர்ட் கிளைவும் இணைந்துதான் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர். இந்த ராபர்ட் கிளைவ், சென்னையில்தான் திருமணம் செய்து கொண்டார். செயின் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சர்ச்சில் இருக்கும் திருமண ரிஜிஸ்டரில் ராபர்ட் கிளைவ் கையொப்பமிட்டிருக்கிறார். அதை ஒரு நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியம் தானே.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


