முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய கிரகம்

விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே தற்போது புதிதாக ஒரு கோள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கிரகத்தை ஜெர்மனியின் மாஸ் பிளாங்க் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதற்கு ஜிஜே 1132பி என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகங்களில் வளிமண்டலம் எதுவும் இல்லை. ஆனால் இதில் பூமியில் இருப்பது போன்று வளிமண்டலம் உள்ளது. இக்கிரகம் பூமியை போன்று 1.4 மடங்கு பெரியதாக உள்ளது. இது பூமியில் இருந்து 39 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளது. இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்த ஆய்வு நடைப்பெற்று வருகிறது.

செல்பி மோகம்

செல்பி மோகத்தால் ஏற்படும் மரணத்தில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். கடந்த ஆண்டு மட்டும் இந்தியா வில் 76 பேரும், பாகிஸ்தானில் 9 பேரும், அமெரிக்காவில் 8 பேரும், ரஷ்யாவில் 6 பேரும், பிலிப்பைன்ஸில் 4 பேரும், சீனாவில் 4 பேரும் இறந்துள்ளனர். இவர்களில் 68% பேர் 24 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் 75.5% பேர் ஆண்கள்.

உடல் நலத்திற்கு...

மதுகுடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்று பொதுவான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதால் உடல்நலம் மேம்படும். அத்துடன் சமூகத்தில் பலருடன் பழக்கம் ஏற்படும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், நல்ல எண்ணம் மற்றும் செயல்பாடுகளால் உடல் நலம் மேம்படும் என கூறப்பட்டுள்ளது.

காகித பாட்டில், Paper bottle

1907  ஓர் விஞ்ஞான அதிசயம் நடந்தது. அதுதான் லியோ பேக்லேண்ட் என்பவர் பாலிமர் பேக்லைட் எனப்படும் பிளாஸ்டிக்கை கண்டறிந்த ஆண்டு. அதன் பிறகு அணு ஆயுதத்தை விட உலகையே அச்சுறுத்தும் ஒரு நச்சாக மாறும் என அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு உலகின் முக்கிய தேவை பிளாஸ்டிக்குக்கு ஒரு உடனடி மாற்று. இந்த சூழலில் நொய்டாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டறிந்ததுதான் காகித பாட்டில். சுக்ஸி பாட்டில் மற்றும் மக்கும் கழிவுகளை கொண்டு இவற்றை 2 ஆண்டு ஆய்வுக்கு பின் வடிவமைத்துள்ளனர். எளிதில் மக்கக் கூடியதாகவும், கசிவுத்தன்மை அற்றதாகவும் இவை உள்ளதாக கூறப்படுகிறது. அப்பாடா எப்படியோ பிளாஸ்டிக்கிலிருந்து தப்பினால் போதும் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்.

உலகிலேயே மிகவும் தடிமனாக வளரும் மரம் எது தெரியுமா?

மரங்கள் பெரிதாகவும், உயரமாகவும் வளரும் என்பது நாம் நன்கு அறிந்ததே. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் யூகலிப்டஸ் மரம் ஒன்று 435 அடி உயரம் வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல கலிபோர்னியாவில் செம்மரம் ஒன்று 379 அடி உயரம் வளர்ந்திருந்தது. ஆனால் தடிமன் என்ற அளவில் ஆப்பிரிக்காவில் உள்ள போபாப் மற்றும் வட அமெரிக்காவில் உள்ள செகோயா மரங்களும்தான் மிக பெரிதானவை. இவற்றின் பருமனை பற்றி கேட்டால் அதில் ஒரு வீடு, அல்லது ஒரு அபார்ட்மென்டே கட்டிவிடலாம் என்றால் கற்பனை செய்து பார்த்து கொள்ளுங்கள்.

நடைபயிற்சி

கூழாங்கல் நடைபாதையில் நடக்கும்போது, கால்களில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன. இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago