பாடஹஸ்தாசனத்தை செய்வது மிகவும் எளிது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு, கால்கள் நன்கு வலிமை அடையும். மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.இந்த ஆசனத்தை தினமும் 3 முதல் 5 முறை செய்து வந்தால், இடுப்பு வளையும் தன்மை பெறுகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கிறது. கால்கள் வலுப்பெறுகின்றன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
மத்திய கிழக்கின் தொல்லியல் பெருமைகளில் பல்மைரா நகரம் தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது மத்திய கிழக்கில் உள்ள அதி முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் இடங்களில் பல்மைரா நகரமும் ஒன்று. பாலைவனச் சோலை என கருதப்படும் சிரியாவில் இந்த நகரம் அமைந்துள்ளது. பண்டைய காலங்களில் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் வணிக வழி தொடர்புகளை இணைக்கும் மிகவும் முக்கியமான நகரமாக பல்மைரா விளங்கியது. இந்நகரில் உள்ள பல்வேறு இடங்களையும் ஐநா பாரம்பரிய பட்டியலில் இணைத்துள்ளது.
பிரமிடுகள் என்றாலே நமக்கு நினைவக்கு வருவது எகிப்துதான். பிரமிடுகளும் அதில் வைக்கப்பட்டுள்ள மம்மி எனப்படும் பழங்கால சடலங்களும் உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்துபவையாகும். ஆனால் உலகிலேயே அதிகமாக பிரமிடுகள் உள்ள நாடு எகிப்து என்று நீங்கள் நினைப்பீர்களேயானால்.. அது முற்றிலும் தவறு. அதிகமான பிரமிடுகள் உள்ள நாடு சூடான் தான். எகிப்து நாட்டில் 138 பிரமிடுகள் உள்ளன என்றால் சூடானில் 244 பிரமிடுகள் உள்ளன. சூடான் நாடு நைல் நதி நாகரிகத்துக்கு மிகவும் எடுத்துக்காட்டான நாடாகும். கிபி 1070 தொடங்கி கிமு 350 வரையிலும் குஷார்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள்தான் சூடானில் பிரமிடுகளை உருவாக்கினர். எகிப்து பிரமிடுகளின் உயரம் சுமார் 400 அடி என்றால் சூடானில் அவை சுமார் 100 அடி கொண்டவையாக அமைக்கப்பட்டிருந்தன.
சிலர் எப்போதும் எதற்கெடுத்தாலும் எனக்கென்று யாரும் இல்லை. எனக்கென்று நண்பர்கள் இல்லை. எல்லாரும் என்னை ஒதுக்கிவைத்துவிட்டார்கள் என புலம்பித் தள்ளுவார்கள். இப்படிப்பட்டவர்களைத் தனிமை உணர்வு கொல்லும். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிரிட்டனை சேர்ந்த 2000 இளம் வயதினரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிருக்கின்றனர். அதில் தனிமையை உணர்வதாக கூறுபவர்களுக்கு, மற்றவர்களை விட 24 சதவிகிதம் வரை தூக்கம் குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் தனிமையை உணர்வதாக கூறுபவர்கள், தங்களால் எந்த செயலிலும் முழு கவனத்தை செலுத்த முடியவில்லை என்றும், நான் முழுக்க சோர்வை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
2000 ஆண்டுகளுக்கு முன் சீனாவை ஆண்டு வந்த ஹூவான் ஹெங் என்ற அரசன் உலகின் முதல் காற்றாடியை பறக்கவிட்டார். பின்னர் மூங்கில், மெல்லிய பட்டுத்துணி, நூலுடன் நல்ல பட்டங்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை பட்டங்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகள் நல நிபுணர் ஒருவரால் 1046 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்த நேரம் தூங்கும் குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு செல்வதற்கு முன்பும், பள்ளியில் படிக்கும் போதும் குழந்தைகளை அதிக நேரம் தூங்க வைக்க வேண்டுமாம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


