முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டாய்லெட் வடிவில் கட்டப்பட்டுள்ள வினோத ஹோட்டலை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக விதவிதமாக ஹோட்டல்களை கட்டுவதை கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் தைவானில் உள்ள தெய்பெய் நகரில் கட்டப்பட்டிருக்கும் ஹோட்டலின் வடிவத்தை கேட்டால் உவ்வே என்று சொல்லத் தோன்றும். ஆனால் அப்படி ஒரு விசித்திர ஹோட்டல் உள்ளது என்பதுதான் உண்மை. அந்த ஹோட்டல் டாய்லெட் வடிவில் கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அந்த ஹோட்டலில் பயன்படுத்தப்பட்டும் தட்டு, டம்ளர், உணவு பொருள்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் அனைத்தும் கழிவறை பொருள்களைப் போலவே பரிமாறப்படுகின்றன. அட கஷ்டகாலமே.. இப்படி ஒரு ஹோட்டலா என சொல்லத் தோன்றுகிறது அல்லவா.

2ஜி-க்கு குட்பை

சிங்கப்பூரில் உள்ள சிங்டெல், ஸ்டார் ஹப், எம்1 ஆகிய மொபைல் அலைவரிசை சேவை நிறுவனங்கள் தங்களின் 2ஜி சேவையை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அந்த ரக மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 3ஜி, 4ஜி மொபைலுக்கு இனி மாறவேண்டியிருக்கும்.

நீல நிற கண்களை கொண்டவர்கள்

மனித குலத்தில் ஒரு காலத்தில் அனைவரும் அடர் பழுப்பு நிற கண்களை உடையவர்களாகவே இருந்தனர். பின்னர் சுமார் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் மரபணுவில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக நீல நிற அதாவது பூனை கண் தோற்றமுடைய மனிதர்கள் தோன்றினர். அண்மையில் டேனிஷ் ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வில், ஸ்காண்டிநேவியா, துருக்கி, ஜோர்டான், இந்தியா போன்ற பகுதிகளில் உள்ள நீல நிற கண்களை உடைய மனிதர்கள் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியிருக்கலாம் என கண்டறிந்துள்ளார். அதுவே மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி நீல நிற கண்களை உருவாக்கியுள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

புதிய தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு ஸ்மாட்போன்களை தொடர்ந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்ககூடிய ஸ்மார்ட்வாட்ச்சை கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மார்ட்வாட்ச் ஆண்ட்ராய்டு 2.0 தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த கைகடிகாரத்தில் நேரம் பார்ப்பதுடன் கூகுள் தேடுப்பொறி தளத்தை இதில் பயன்படுத்த முடியும். மேலும் மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய இயலும்.

டினோசர்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்ந்தன என தெரியுமா?

டினோசர் என்றாலே பெரியவர்கள் தொடங்கி சிறிவர்கள் வரை அனைவருக்கும் ஆர்வம் தான். ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து அழிந்து போன உயிரினங்களில் மிகப் பெரியவை டினோசர்கள். அவை குறித்த ஆய்வுகள் உலகம் முழுவதிலும் நடைபெற்று வருகின்றன. அதில் அண்மையில் நடைபெற்ற ஆய்வில் டினோசர்கள் 90 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு அண்டார்டிகா பகுதிகளில் நடமாடியது தெரியவந்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஆல்ப்ரெட் வேக்னர் கல்வி நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன் முடிவுகள் நேச்சர் இதழிலும் வெளியிடப்பட்டன. 90 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகா பிரதேசம் இப்போது போல பனி படர்ந்த பிரதேசமாக இல்லாமல் அடர்ந்த வனமாக இருந்தததாக சொல்லப்படுகிறது. அவற்றில் டினோசர்கள் நடமாடின என்கிறது அந்த ஆய்வு.

விரைவில் வருகிறது

பிஎம்டபிள்யூவின் எவர்க்ரீன் மாடலான பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் (BMW R 1200 GS) பைக்குகளை பறக்கும் வகையில் வடிவமைப்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பறக்கும் மோட்டார் சைக்கிள்களின் மினியேச்சர் மாடல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago