Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஹாலிவுட் சினிமாக்களில் கழிவறை

இன்றைய ஹாலிவுட் படமானாலும் சரி, வெளிநாட்டு படமானாலும் ஒரு சீன்லயாவது கழிவறை இடம் பெறாமல் போவதில்லை. ஆனால் 1960கள் வரையிலும் அமெரிக்க ஹாலிவுட் படங்களில் கழிவறையே இடம் பெற்றதில்லை. முதன்முதலாக முக்கிய பாத்திரம் ஒருவர் கழிவறையில் காகிதத்தை கசக்கி எறிந்து, தண்ணீரை திறந்து விடுவதை போன்ற காட்சியை சைக்கோ திரைப்படத்தில் ஹிட்ச்காக் அமைத்திருப்பார். அதன் பிறகே ஹாலிவுட் படங்களில், கழிவறை, குளிலறை, ஷவர் போன்றவை இடம் பெற்றன என்றால் ஆச்சரியம் தானே..

சூடான நீர்

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்ட பின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

கவனம் தேவை

ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவது சரியல்ல. ஒருவரிடம் இருக்கும் சருமப் பிரச்சனை மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பு இதனால் அதிகமாகும்,  மேலும், இது சுகாதாரமானது கிடையாது. பி.ஹெச் அளவு 5.5 இருக்கிற சோப்பாகத் தேர்ந்தெடுப்பது நல்லது.

யூடியூப் முதன் முதலில் எதற்காக தொடங்கப்பட்டது தெரியுமா?

யூடியூப் வீடியோ தளத்தை இன்று பார்க்காதவர்களோ, பயன்படுத்தாதவர்களோ இருக்க முடியாது. அந்தளவுக்கு இன்றைக்கு அன்றாட வாழ்வில் ஒன்று கலந்த ஒரு வீடியோ தளமாக மாறிவிட்டது. ஆனால் யூடியூப் டாட் காம் முதன் முதலில் எதற்காக தொடங்கப்பட்டது தெரியுமா.. தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி அதாவது காதலர் தினத்தன்று யூடியூப் தொடங்கப்பட்டது. தங்களது காதல் இணையர்களுடன் டேட்டிங் மற்றும் காதலை பரிமாறிக் கொள்வதற்காகத்தான் இந்த வீடியோ தளம் தொடங்கப்பட்டது. ஆனால் மக்கள் யாரும் அது போன்ற வீடியோவை பதிவேற்றம் செய்யவில்லை. இதனால் வெறுத்து போன யூடியூப் தளம் வேறு வழியின்றி அனைத்து வகையான வீடியோக்களையும் போட்டு தொலையுங்கள் என கொஞ்சம் பரந்து மனது காட்டவே... தற்போது யூடியூப் வீடியோ மக்கள் மனதில் பட்டையை கிளப்பி வருகிறது.

நெல்சன் மண்டேலா

குத்துச்சண்டை வீரராக அறியப் பெற்ற நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவர் ஆவார். மேலும் தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் இவர். இவரது உண்மையான பெயர் நெல்சன் மண்டேலா இல்லை. இவரது இயற்பெயர் ரோபிசலா மண்டேலா ஆகும். இவரது பெயரின் முன் உள்ள நெல்சன், இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரால் சூட்டப்பட்டதாம். மண்டேலா சிறையில் சுமார் 27 ஆண்டுகள் இருந்தார். உலக வரலாற்றிலேயே சிறையில் நீண்ட காலம் கழித்த தலைவர்கள் கிடையாது. பல ஆண்டுகள் இவர் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டு வந்தார்.

தமிழில் ஸ்கைப்

குறைந்த அளவு இணைய வேகத்திலும் சிறப்பாக இயங்கும் வகையிலான ஸ்கைப் லைட் செயலியை இந்திய பயனாளர்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் இந்த செயலி, குறைவான இணைய வேகம் கொண்ட மொபைல் போன்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும், தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் ஸ்கைப் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்கைப் லைட் செயலியின் செட்டிங்ஸ் உள்ளிட்டவைகளை ஆங்கிலம் தெரிந்திருந்தால்தான் கையாள முடியும் என்ற நிலை மாறி, பிராந்திய மொழிகளிலேயே அந்த செயலியைக் கையாள முடியும். இந்த செயலியை கூகுள் ப்ளேஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago