முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் எது தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை தொகுத்து வழங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அரபு நாட்டிலுள்ள Mshahed International Group என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். 16.40 அடி அகலமும், 26.44 அடி உயரமும் கொண்டதாக 1360 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய புத்தகம் என்ற கின்னஸிலும் இடம் பிடித்துள்ளது.

மை, India Ink

சீன தத்துவவாதியான டியன் சியு (Tien Lcheu) என்பவர் கி.மு. 2697-ஆம் ஆண்டில் கார்பன் நிறமி (Carbon Black) புகைக்கரி (பைன் மர துண்டுகளை) எரித்து கிடைக்கப்பெற்றது), இறைச்சி கொழுப்பு (விலங்குகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட Gelatin Bone Clue), ஆகியவற்றுடன் விளக்கு எண்ணெய்யையும்  சேர்த்து ஆட்டு உரலில் இட்டு அரைத்து அடர் கருப்பு நிறத்தை உடைய எழுதுவதற்கான திரவத்தை தயாரித்தார். இது தான் உலகில் முதன் முதலில் எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட மை ஆகும். உலகிலேயே முதன் முதலாக எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட இந்த மை-க்கு அதை தயாரித்த டியன் சூட்டிய பெயர் என்னவென்று தெரியுமா 'இந்தியா இங்க்" (India Ink). சீனாவில் கண்டறியப்பட்ட மைக்கு ஏன் இந்தியா இங்க் என்று பெயரிட்டார் என்று கேட்கிறீர்களா... மை தயாரிக்க தேவைப்பட்ட முக்கிய மூலப்பொருளான கார்பன் நிறமி (Carbon Black) இந்தியாவில் இருந்துதான் சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில்தான் டியன், தான் தயாரித்த உலகின் முதல் மைக்கு இந்தியா இங்க் என்று பெயரிட்டார்.

கோடையில் 15 செமீ உயரம் வளரும் ஈபில் கோபுரம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் அமைந்திருக்கும் மிகப் பெரிய ஈபில் கோபுரம் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். சுமார் 18 ஆயிரம் எஃகு துண்டுகளை 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று இணைத்து இந்த 324 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட கோபுரத்ைத அமைத்தனர். இது உலக அதிசயங்களில் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால் கோடை காலத்தில் இந்த கோபுரம் 15 செமீ கூடுதலாக வளர்ந்து விடும் என்றால் ஆச்சரியம் தானே.. ஏன் என்கிறீர்களா, இது முழுக்க முழுக்க உலோகத்தால் செய்யப்பட்டுள்ளதால், கோடை காலத்தில் எஃகு விரிவடைந்து ஒட்டுமொத்தமாக இதன் உயரமும் அதிகரித்து விடுகிறது. விரிவடையும் போது பாதிக்கப்படாத வகையில் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

முகத்தை பராமரிக்க

ஒரு நாளைக்கு 2 முறை மட்டும் முகத்திற்கு சோப்பு போட்டு குளித்தால் நல்லது. இல்லையெனில், தோலில் வறட்சி ஏற்படும். மேலும், சூடாகவோஅல்லது அதிக குளிரான நீரைக்கொண்டு முகத்தை கழுவுவதால் முகப்பொலிவு ஏற்படாது. முகம் கழுவுவதற்கு முன்னால் நம் கைகளும், முகத்தை துடைக்க பயன்படுத்தும் துண்டையும் சுத்தமானதாக வைத்துக்கொள்ள வேண்டும்.

முகப்பருவை குறைக்க

கொழுப்பு நீக்கப்பட்ட உணவுப் பொருட்களும் பிம்பிளை உண்டாக்கும். கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் அதிகமாக குடிப்பதாலும், குறிப்பாக கொழுப்பு குறைவான தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது, அந்த சர்க்கரை கொலாஜன் இழைகளைப் பாதிப்பதோடு, பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பிக்க முடியாமலும் செய்யும். இதனால் முகப்பரு ஏற்படுகிறது.

தமிழ் கல்வெட்டு, Tamil inscription

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் மங்கோலிய பேரரசரான குப்லாய்கானின் ( Kublai Khan) ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சூவன்லிசௌ(shuan Chou) துறைமுக நகரில் உள்ள இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீன பேரரசரின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும். சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ஆம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் பேரரசனான செங்கிஸ்கானின் பேரனாவான். மங்கோலிய பேரரசர்கள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony