முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வாட்டும் வெப்பம்

ஆர்க்டிக் பிராந்தியத்தில் சராசரியைவிட 20 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பக்காற்று வீசுகிறதாம். வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் சராசரியைவிட சுமார் 5 டிகிரி செல்சியஸ்வரை அதிக வெப்பம் இருக்கும். இந்த முறை அது 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்ற அரிதான நிகழ்வுகள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களால் உருவாக்கப்படும் பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பூமி தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், வடதுருவத்தின் கடல் பகுதியிலும், நிலப் பகுதியிலும் மூடியிருக்கும் பனிக்கட்டிகள் உருகி வருவதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

இனி மவுஸ் வேண்டாம் - வந்து விட்டது ஸ்மார்ட் ரிங்

இன்றைக்கு கம்பியூட்டர் துறையில் எவ்வளவோ வளர்ந்து விட்ட போதிலும் சில விஷயங்களில் கொஞ்சம் முன்னகராமலேயே இருந்து வந்தோம். ஆனால் இந்த புதிய நூற்றாண்டு எல்லாவற்றையும் மாற்றி வருகிறது. அதில் லேப்டாப், டேப்லட்  போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு மவுஸ் பயன்பாடு என்பது எவ்வளவு தேவை என்பதை உணர்ந்திருப்பார்கள். டச் பேட் இருந்த போதிலும் கூடவே ஒரு மவுசையும் பையில் வைத்து எடுத்து செல்வர். இனி அந்த கவலை வேண்டாம்.. வந்து விட்டது மவுசுக்கு பதிலாக ஸ்மார்ட் ரிங். இதை ஆள்காட்டி விரலில் மாட்டிக் கொண்டு வழக்கமாக மவுசை பயன்படுத்துவது போல ஆட்டிக் கொண்டிருந்தால் போதும்... லேப்டாப்பில், டேப்லட்டில் அவ்வளவு ஏன் கணிணியில் கூட ஜாலியாக வேலை பார்க்கலாம். இனி  எலி வாலில் தலைகீழாக தொங்குவதை போல மவுஸ் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியது இல்லை.. இந்த ரிங் போதும். தேவைப்படாத போது டிராயரில் போட்டு பூட்டி விட்டு ஜாலியாக செல்லலாம். தேவைப்படும் போது சட்டை பையிலோ.. விரலிலோ மாட்டிக் கொண்டு செல்லலாம்.

வாரம் முழுவதும்...

பொதுவாக காதலர் தினம் என்றால் அனைவருக்கும் பிப்ரவரி 14 மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் காதலர் தினமானது பிப்ரவரி 7 ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. காதலர் தின வாரத்தின் முதல் நாள் ரோஸ் டேவில் ஆரம்பித்து ப்ரப்போஸ் டே, சாக்லெட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, இறுதியாக கிஸ் டேவில் முடிவடைகிறது.

புதினாவின் சக்தி

புதினாவை துவையலாக செய்து சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகள் அகலும், கடுமையான வயிற்றிப் போக்கினை நிறுத்தும். இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட் சத்துக்கள் உள்ளன.

லயன் ஃபிஷ்

தனது உணவுக்காக மற்ற அரிய வகை மீன்களை அழித்துவரும் லயன்ஃபிஷ்-ன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பெர்முடா நாட்டு உணவகம் ஒன்று லயன்ஃபிஷ்-ஐ வைத்து சமையல் போட்டியை நடத்தியது. இதற்காக ஆளில்லா ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ரோபோ கடலில் உள்ள லயன்ஃபிஷ்க்களை வேட்டையாடியது. கரைக்கு பிடித்து வந்து வியப்பை ஏற்படுத்தியது.

சருமம் பளபளக்க...

ஆரஞ்சு அல்லது எலுமிச்சை பழங்கள் அல்லது ஆப்பிள் பழ த்தை குழைத்து பேஸ் பேக் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து மெல்லிய காட்டன் துணியில் துடைத்து எடுக்க வேண்டும். இதை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ளநச்சுகள் நீங்கி சருமம் நல்ல நிறத்துடன் காணப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony