முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மழை காலமும் உணவும்

மழைக்காலத்தில் விட்டமின் சி நிறைந்த பேரிக்காய், மாதுளை, மிளகு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும். கிருமிகளை அழித்துவிடும். பூண்டு உடலுக்கு சூட்டை தரும். இஞ்சி வயிற்றுப் போக்கு, அஜீரணம் ஆகிய்வற்றை தடுக்கும். அதிக நார்சத்து கொண்ட ஆப்பிள் மலச்சிக்கலை தடுக்கும். ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.

நாசாவின் ரோவரை தரையிறங்க செய்த இந்திய பெண் சுவாதி

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்பது குறித்து ஆராய நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கிருந்து தண்ணீரின் வழித்தடங்களை படமெடுத்து உலகை வியப்பில் ஆழ்த்தியது. அதெல்லாம் சரி.. அதை விட முக்கியம் அதை தரையிறங்க செய்த குழுவின் தலைவர் யார் தெரியுமா.. சுவாதி மோகன் என்ற இளம் பெண். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரது பெற்றொர் பெங்களுரைச் சேர்ந்தவர்கள்.சிறு வயதிலேயே பெற்றோர் அவரது அமெரிக்கா வந்துவிட்டனர். சுவாமி தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை வடக்கு வெர்ஜீனியா-வாஷிங்டன் மெட்ரோ பகுதியில்தான் கழித்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திர மற்றும் விண்வெளி பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் ஏரோநாட்டிக்ஸ் / வானியல் துறையில் எம்ஐடியிலிருந்து எம்.எஸ் மற்றும் பி.எச்.டி படிப்பை முடித்தபோது அவருக்கான பரந்த உலகம் திறந்திருந்தது. நாசாவில் பணிக்கு சேர்ந்தது முதலே ஏற்றம்தான். அங்கு படிப்படியாக விரைவாக முன்னேறி பெர்சிவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் குழுவின் தலைமை பொறுப்புக்கு வந்தார். வெற்றிகரமாக சாதித்தும் காட்டியுள்ளார். இதற்கெல்லாம் உந்துதலாக இருந்தது எது என்று கேட்டால், சிறுவயதில் தான் பார்த்த சயின்ஸ் பிக்சன் தொடரான ஸ்டார் டிரக்தான் என்கிறார் சிரித்தபடி. ஹேட்ஸ் ஆப் சுவாதி.

மிகப்பெரிய வைரம்

ரஷ்ய வரலாற்றி‌லேயே அதிக மதிப்புள்ள வைரம் ஒன்று ஏலத்துக்கு வந்திருக்கிறது. இதன் எடை 51 கேரட். இவை அனைத்தும் ஜார் மன்னர்கள் சேகரித்து வைத்தவை. இவை சுமார் 300 ஆண்டுகள் வரை பழமையானவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனை ஏலம் எடுக்க செல்வந்தர்கள் முண்டியடிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிறந்த குழந்தைகள் கண்ணீர் விடுவதில்லை

பிறந்த குழந்தைள் வீறிட்டு அழுவதை நாம் கேட்டிருப்போம். பசியின் போதும், தாயின் துணை தேடியும் பிறந்த குழந்தைகள் அழுவது வழக்கம். ஆனால் நமக்கு இதுவரை தெரியாத ஒன்று என்ன தெரியுமா.. அவ்வாறு அழுதாலும் அவர்களுக்கு கண்ணீர் வருவதில்லை என்பதுதான். ஏன் தெரியுமா.. பிறந்த குழந்தையின் கண்களில் கண்ணீர் சுரப்பிகள் இருக்காது. கண்ணீர் சுரப்பிகள் 4 முதல் 12 வாரங்களுக்கு பிறகே வளரத் தொடங்கும். பிறகென்ன அதற்கு பிறகு கண்ணீர் மழைதான்.

வெந்நீர் பயன்

வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. மேலும், உடலை சுத்தம் செய்து, வேகமாக வயதாவதை தடுக்கிறது. வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறையும். நஞ்சை வெளியேற்றும். வெந்நீரில் சுக்கு கலந்து குடித்தால் வாயுத் தொல்லை இருக்காது. எடை குறையும்.

அழகை மேம்படுத்தும்

பார்வைத்திறன் மேம்படவும், அழகுக்காகவும், கண்ணாடி அணிவதை விரும்பாதவர்கள், கான்டாக்ட் லென்சை பயன்படுத்துகின்றனர். இதை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அணிவதே நல்லது. கான்டாக்ட் லென்ஸ் அணிவதன் மூலம் மிகத் துல்லியமான பக்கவாட்டுப் பார்வையைப் பெற முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony